அழகும் ஆபத்தும்
அழகும் ஆபத்தும்
மேற்கு மலை தொடர்களில்
வரிசையாய் நின்ற
வழுக்கை தலை மலைகள்
அதன் உச்சியில்
சூழ்ந்து நின்ற
கருமை நிற மேகங்கள்
கொட்டி தீர்த்த மழை
முகமெல்லாம் வழிந்து
வெளேர் என்ற நீர்
வீழ்ச்சியுடன்
பெருக்கெடுத்து வந்து
ஆடு மாடு கோழிகளை
அடித்து சென்றதுமில்லாமல்
ஊரின் தொடர்புகள்
எல்லாம் துண்டித்து
குடிகளை
சுற்றி வெள்ளமாய்
சூழ்ந்து நிற்கிறது
உயிர் பிழைக்க
கூரையின் மேல் நின்று
வானத்தில் இருந்து
சோறு விழ
விமானங்களை எதிர்பார்த்து
நின்று கொண்டிருக்கும்
மனித உயிர்கள்