சூரிய நமஸ்காரம்

உதய காலம் .......
கீழ்வானிலிருந்து வேகமாய்
வெளிவரும் காலைக்கதிரவன்
சற்றே சிவந்த அடிவானம்
இதோ இதோ காண்கிறது
;ஆரஞ்; நிற சுழல்கோளம்- கதிரவன்
அவனே ...... எத்தனை அழகு
இப்போது நம் கண்களால் அவனை
நேரே பார்க்கலாம் தரிசிக்கலாம்
நம்மை வாழவைக்கும் தெய்வம்
கைகளை உயர்த்துவோம் கூப்புவோம்
கதிரவனுக்கு வந்தனம் செய்வோம்
இது 'இயற்கைக்கு' நாம் செய்யும் துதி
சூரிய நமஸ்காரம் ......
கண்களுக்கு நேர்த்தி... இயற்கையின் வரப்பிரசாதம்
அப்படியே ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் ...
எழுந்து பின் ஒருமுறை..... தேகப் பயிற்சி
சூரிய நமஸ்காரம்......... இயற்கையை வணங்குவோம்
உற்சாகம் மன அமைதி பெறுவோம்


இத்தனைக் கேட்டு , தம்பி
இன்னும் என்ன உறக்கம் உனக்கு
எழுந்துவிடு அதி காலையில்
அதோ .....கதிரவனின் கிரணங்கள்
உன் வீட்டு ... உன் படுக்கை அரை
உயர ரக ;பிரெஞ்சு' கண்ணாடி ஜன்னலைத்
தாண்டி உன்மீது படுகின்றது
உன்னை செல்லமாய் எழுப்பிட...

அதோ அங்கே குளத்தில் தாமரை மொட்டுக்கள்
கதிரவனின் கதிர்களின் ஸ்பரிசம் பட்டதுமே
அப்பப்பா எப்படி பூரித்து அலர்கின்றன
எத்தனை உயித்துடிப்பு அதில் எத்தனை
புத்துணர்ச்சி.... பூவிற்கு ஆனந்தம் காண்கிறது தாமரை !

தம்பி, நீ மட்டும் இன்னும் வராத தூக்கத்தை
வரவழைத்துக்கொண்டு இன்னும் சோம்பித்
துவள்கிறாய் போர்வைக்குள்ளே!,,,, எழுந்திரு
கதிரவனை வணங்கிடு.... அந்த தாமரைப்போல்!
கதிரவன் உன்னை ஊக்கிவிப்பான்
நல்ல எண்ணங்கள் மனதில் வளரும்
நாள்தோறும் நல்ல எண்ணத்தில்
பணிகள் செய்ய,,,,

சூரிய நமஸ்காரம்.....
இயற்கைக்கு வந்தனம்
வந்தனம் செய்ய இன்னும் தயக்கம் ஏன் தம்பி
ஏழுந்திரு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Aug-20, 8:05 am)
பார்வை : 141

மேலே