பிரவின் ராஜ் ஆ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரவின் ராஜ் ஆ |
இடம் | : விருத்தாசலம் |
பிறந்த தேதி | : 09-Jun-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 3674 |
புள்ளி | : 93 |
வண்ண கோலங்கள்;
வாசலிலே இட்டு..
அசைந்தாடும் தோரணமோ!
மாவிலைகளை கட்டு..
தித்திப்பு தெவிட்ட;
கரும்புகளை வெட்டு..
நறுமணம் கமழ;
மஞ்சள் கிழங்கு போட்டு..
புதுவெள்ளம் நெய்யும்;
பச்சரிசியுடன் சங்கமித்து..
பொங்கின்ற பொங்கலோ!
சமத்துவம் கொண்டு..
இயற்கை கதிரவன்;
ஒளிர்கதிர் வீச..
உழவன் உழைப்பு;
ஊர் முழுவதும் பேச..
பொங்கட்டும் பொங்கல்;
பொங்கலோ!! பொங்கல்!!
- ஆ.பிரவின்ராஜ்.
உலகம் சுருங்கி,
உள்ளங்கை பிடியில்,
விஞ்ஞான எழுச்சியால்,
வியப்புறச் செய்யவே!
இணையத்தின் பிணைப்பு,
இதயத்தில் சங்கமித்து,
முகமறியா முகவர்கள்,
முகநூலில் புதையவே!
காலம்பல கடந்தும்,
கடந்திட்ட நினைவுகளை,
கைப்பேசி வழியாக,
கண்டுக் களிப்புறவே!
நல்லவை அல்லவையென,
நன்னெறி நாமறிந்து,
வழிகாட்டிய நுண்ணறிவில்,
வளமாய் வாழ்ந்திடவே!
-ஆ.பிரவின் ராஜ்
சந்தித்த வேளை
சிந்திக்க மறந்தேன்..!!
ஸ்பரிசத்தை மெல்ல
பதமாக உணர்ந்தேன்..!!
தந்திட்ட வருடல்கள்
காணமழை பொழிய..!!
சிந்திய சொற்களில்
மனமோ நொறுங்க..!!
கவ்விய பார்வைகள்
முட்களாய் தைத்திட..!!
பவ்வியமாய் நாடகம்
பாவை அரங்கேற்றிட..!!
நிந்தித்த தடுமாற்றம்
நினைவினில் ஒதுக்கியே..!!
முந்திய காதலில்
முடிவாய் வீழ்ந்ததேனே..!!
விழிப் பேசிய மொழியில்,
கவிப்பூ ஒன்று பூத்ததடி..!!
இதழ் அசைவில் விழுந்தே,
இதயத்தை உன்னில் தொலைத்தேனடி..!!
கிறங்கச்செய்யும் உந்தன் புன்னகை,
உறங்கவிடா இம்சை செய்யுதடி..!!
கற்பனை கனவில் நாளும்,
காலத்தை கடத்துவதா? நியாமடி..!!
புத்தனாய் வாழ்ந்த என்னை,
பித்தனாய் மாற்றியது ஏனடி..!!
மந்திர தந்திரம் இல்லா,
வசப்படுத்திய நாட்களும் போதுமடி..!!
சிறைபிடிக்கும் விழிகள் கொண்டு,
காதல்கைதியென சிறை பிடித்தாயடி!!
தங்கை எனும் உறவாக,
தரணியிலே பிறந்தவளே..!!
உரிமை எனும் உறவாக,
உதிரத்தோடு கலந்தவளே..!!
சகோதர பாசம் அதை,
சகாசமாய் புரிந்திடுவேன்..!!
தோள்மீது தினம் சுமந்தே,
தோழனாக மாறிடுவேன்..!!
என் நிழல்களின் உருவமாய்,
எந்நாளும் நீயிருக்க..!!
எந்த துன்பம் வந்தாலும்,
எளிதாக தகர்த்திடுவேன்..!!
அண்ணா என்று சொன்னாலே,
ஆழ்கடலில் தூரெடுப்பேன்..!!
தங்கை உனை தாங்குவதே,
தவமாக தானிருப்பேன்..!!
-ஆ.பிரவின் ராஜ்
ஐயிரண்டு மாதங்கள்,
கருவறையில் சுமந்து;
தொப்புள்கொடி உறவாய்,
உயிர் கொடுத்து..!!
பிரசவ வலியினை,
துட்சமாய் மறந்து;
தொட்டுத் தழுவி,
முகமுகமாய் நுகர்ந்து..!!
கண்னே! பவளமே!
என்றெனை அழைத்து;
பசிஉறக்கம் தளர்ந்தே,
அள்ளியெனை அணைத்து..!!
வடியும் தேனாய்,
முத்தமழை தந்து;
ஊர்கண் படுமே,
பொத்தியெனை வளர்த்து..!!
இத்தனை பரிவோடு,
கொட்டித் தீர்த்தவளே!
எதை கொண்டு அடைப்பேன்
உன் அன்பிற்கு ஈடாக..!!
-ஆ.பிரவின் ராஜ்
என் மஞ்சள் நிலவே!
உன்னை காணும் வரையில்,
உயிர் உருகி தீயாய்
நாளும் கசிந்திடுதே..
விழிக்கோலம் கரைய
உன் நினைவுகள் சுமந்து,
ஆண் இதயம் கதறி
மெழுகாய் உருகியதே..
விழித்தெழு தமிழா!
விழித்திடு..
விதைக்க பிறந்தோம்
விருட்சமாய் முளைத்திடு..
மதத்தை போற்றும்
மானிடப் பிறப்பு,
மனிதம் மறந்ததை மாற்றிடு..
சாதி சகதியை
உடலினுள் புகுத்தி,
உயிராய் வாழ்வதை தடுத்திடு..
நம் கரம் இனைந்தால்!
உண்டு வாழ்வென,
அறிந்து நீயும் முற்படு...
என்னவளே!
இதய வாசலில்
நுழைந்தவளே..
நிலவு ஒளி
உன் மேனியில் பட்டதால்
இரவு இறந்தது!!
பகல் பிறந்தது!!
மை இருட்டும் சாமத்துல
கொண்டையில பூ முடிச்சு
பல்லாக்கு வீதியோரம்
நெடுநெடுனு போறவளே..
நெற்றி முடி சரிஞ்சுதுன்னு
நெற்றிச்சுட்டி வாங்கித்தந்தேன்
ஒய்யாரமா பார்த்தயடி
ஒதுங்கி நின்னு போரதென்ன..
கண்னாடி வளைவிய
கை நிறைய போட்டுக்கிட்டு
கை ஆட்டி பேசும்போது
வளைவி ஓசை பேசுதடி..
கருவாச்சி நீ சீலை கட்டி
குடம் நிறைய தண்னீர் புடிச்சு
அடியெடுத்து நடக்கும்போது
கொலுசு முத்தும் கொஞ்சுதடி..
திருவாரூர் தேர் ஒன்று
அசைஞ்சாடி போகுதுன்னு
பின்னாடி உன் அழக
பார்த்து பார்த்து ரசித்தேனடி..
வந்தவன்
போனவன்
ஆண்டதெல்லாம்
அடங்கியிருந்ததன்றே..
கள்ளம்
கபடம்
ஈரமெல்லாம்
கூனி குறுகியதன்றே..
ஓட்டு போட்டு
உனை நீயே விற்றாய்
இனி செல்லா நோட்டாய்
ஆளாகிவிட்டாய்..
மண்னை வெட்டி
வளமாக்கும்
உழவன் உழைப்பும்
வீனாயிற்றே..
பகலவன் விரித்த
கதிரினிலே
தேடிய உணவும்
பறிபோயிற்றே..
மனித தன்மை
மாய்ந்ததினால்
உரிமையாவும்
விலைபோயிற்றே..
நெஞ்சை நிமிர்த்தி
நேர்த்திகளாய்
ஆசை கனாவில்
தவழ்ந்திட நாளுமுன்டோ..