கருவாச்சி நெனப்பு

மை இருட்டும் சாமத்துல
கொண்டையில பூ முடிச்சு
பல்லாக்கு வீதியோரம்
நெடுநெடுனு போறவளே..
நெற்றி முடி சரிஞ்சுதுன்னு
நெற்றிச்சுட்டி வாங்கித்தந்தேன்
ஒய்யாரமா பார்த்தயடி
ஒதுங்கி நின்னு போரதென்ன..
கண்னாடி வளைவிய
கை நிறைய போட்டுக்கிட்டு
கை ஆட்டி பேசும்போது
வளைவி ஓசை பேசுதடி..
கருவாச்சி நீ சீலை கட்டி
குடம் நிறைய தண்னீர் புடிச்சு
அடியெடுத்து நடக்கும்போது
கொலுசு முத்தும் கொஞ்சுதடி..
திருவாரூர் தேர் ஒன்று
அசைஞ்சாடி போகுதுன்னு
பின்னாடி உன் அழக
பார்த்து பார்த்து ரசித்தேனடி..

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (1-Dec-17, 8:52 pm)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
பார்வை : 222

மேலே