ரோஜாவே

நெஞ்சின் உள்ளே
உந்தன் சுவாசம்
சிறு காற்றாக வந்தாயடி!
இருளும் நிழலும்
பகலும் இரவும்-நான்
உன் அழகைக் கண்டேனடி!
காதல் மழையே...
உன் அழகில் நனைந்தேன்...
துள்ளும் மீனாய்...
உன் விழியில் தெரிந்தேன்...
ரோஜாவே...
ரோஜாவே...என்னச்சொல்ல...
உன் மேலே...
விழுந்தேனே...
காதல் தல்ல...
இசையா இசையா-இசை
உயிரின் உருவா-இவை
நம் காதல் கடவுள் பரிசா!
ஒலியா ஒலியா-ஒலியும்
இசையின் அசைவா-அதிலும்
குயில்பாட்டு இவளின் குரலா!
அதிசய பெண்ணோ...
பூவின் மகளோ...
நிலவின் நிழலோ...
தேவதை நகழோ...
ரோஜாவே...
ரோஜாவே...என்னச்சொல்ல...
உன் மேலே...
விழுந்தேனே...
காதல் தல்ல...
உயிரின் உறவோ...
என் மனதின் மரமோ...
காதல் நிறமோ...
இவள் கவிதை வரியோ...
உயிரின் உறவு என்றும்
பிரிந்ததில்லை...
காதல் கன்னிக் கண்ணில்
தெரிந்ததில்லை...
கண் அழகால் என்னை
ஈர்த்துவிடு...
இல்லை
நெற்றி பொட்டால் என்னை
மாற்றிவிடு...
ரோஜாவே...
ரோஜாவே...என்னச்சொல்ல...
உன் மேலே...
விழுந்தேனே...
காதல் தல்ல...

எழுதியவர் : sahulhameed (1-Dec-17, 8:51 pm)
சேர்த்தது : HSahul Hameed
Tanglish : rojaave
பார்வை : 277

மேலே