கோழையின் காதல்
கோழையின் காதல்
அவள் முகத்தை கூட முதல் முறை தயங்கி தயங்கி தான் பார்த்தேன்
அவள் பெயர் கூட அட்டன்டன்ஸ் மூலம் தான் தெரிந்தது
அவளை பின்தொடராத நாட்களே இல்லை, ஆனால் எப்பொழுதுமே அந்த இருபது மீட்டர் இடைவெளி குறைந்ததில்லை
அப்பா மகன் உறவை போல, அவள் மேல் அளவுக்கு மீறி சொல்ல முடியாத காதல், மரியாதை, இறுதியில் சொல்ல முடியாத பயமும் கூட தான்
அவள் பெயரை கூப்பிடுவதற்கே அரை மணி நேர ரிஹர்சல், அப்பொழுதும் கூட பெயரில் பாதி தான் வாய் வழியே வந்தது , மீதியோ தொண்டைக்குள்ளே சிக்கி சமாதியாகி விட்டது,
வந்த பாதியும் என்னை போல பயந்தாங்கோளி, எனக்கே கேட்கவில்லை
இந்த பெயருக்கே பல உள் மனப்போர்கள், பின்பெப்படி இந்த கோழையின் காதல்
தூரத்தில் பார்ப்பது, ரசிப்பது, பேசாமல் வீடு திரும்புவது,
தூரத்தில் பார்ப்பது, ரசிப்பது, பேசாமல் வீடு திரும்புவது, இதுவே இந்த கோழைக்கு தெரிந்த காதல்,
இதுபோதாதென்று எப்பொழுதும் சமாதானம் கூறும் ஓர் மனசாட்சி வேறு ,
நாளை நாளை நாளை என்று நாட்கள் கழிந்தது தான் மிச்சம்
அவளை பற்றிய விடயங்கள் அவளை விட இந்த கோழைக்கு அத்துபடி
எப்பொழுதும் ரசித்து ரசித்து அவளை பற்றிய சந்தோசம் தான், ஆனால் ஓர் மெசேஜ் அனுப்புவதற்கு மனதில் ஓராயிரம் குழப்பங்கள், கற்பனைகள், கேள்விகள்
கடைசியில் இந்த கோழைக்கு கிடைத்த பரிசு பெரும் நினைவுகள் மட்டும் தான்
முடியும் வரை அவளுக்கே தெரியாமல் அவளை காதலித்தான்
..
முடியும்வரை அவளுக்கே தெரியாமல்.....
இப்படிக்கு,
நினைவு காதலுடன் இந்த கோழை