இணையம்
உலகம் சுருங்கி,
உள்ளங்கை பிடியில்,
விஞ்ஞான எழுச்சியால்,
வியப்புறச் செய்யவே!
இணையத்தின் பிணைப்பு,
இதயத்தில் சங்கமித்து,
முகமறியா முகவர்கள்,
முகநூலில் புதையவே!
காலம்பல கடந்தும்,
கடந்திட்ட நினைவுகளை,
கைப்பேசி வழியாக,
கண்டுக் களிப்புறவே!
நல்லவை அல்லவையென,
நன்னெறி நாமறிந்து,
வழிகாட்டிய நுண்ணறிவில்,
வளமாய் வாழ்ந்திடவே!
-ஆ.பிரவின் ராஜ்