பொங்கல் நல்வாழ்த்துக்கள்

கழனியில் விளைந்து
களத்தினில் குவிந்து
தெருவினில் காய்ந்து
கன்ம உமி களைந்து
அரிசி என்ற அரசனாய்
தை மாத முதல் நாளில்
புதுப்பானையில் குதித்து
பசித்தீர்க்கும் உணவாய்
பலங்கொடுக்கும் அமிழ்தாய்
மாறி பல உயிர்களுக்கு
உயிர் கொடுக்கும் உம்மை
உருவாக்கிய கோ உழவன்
உதவி புரிந்து கோ எருதுகளை
குல தெய்வமாய் கொண்டாட
எம் மரபு விழாவினை ஏற்கும்
யாவருக்கும் மனம் மகிழ்ந்த
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (13-Jan-21, 8:12 pm)
பார்வை : 179

மேலே