காதல்

சந்தித்த வேளை
சிந்திக்க மறந்தேன்..!!
ஸ்பரிசத்தை மெல்ல
பதமாக உணர்ந்தேன்..!!
தந்திட்ட வருடல்கள்
காணமழை பொழிய..!!
சிந்திய சொற்களில்
மனமோ நொறுங்க..!!
கவ்விய பார்வைகள்
முட்களாய் தைத்திட..!!
பவ்வியமாய் நாடகம்
பாவை அரங்கேற்றிட..!!
நிந்தித்த தடுமாற்றம்
நினைவினில் ஒதுக்கியே..!!
முந்திய காதலில்
முடிவாய் வீழ்ந்ததேனே..!!

எழுதியவர் : ஆ.பிரவின் ராஜ் (5-Dec-20, 7:44 am)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
பார்வை : 311

மேலே