மழையும் காற்றும் நாட்டியமாய்

காற்றும் மழையும் நாட்டியமாய்

வலமும் இடமும்
சுற்றி சுற்றி
வீசும் பெரும் காற்று
வியர்வை துளிகளால்
முகத்தில் மோதுகிறது

தலையை காக்க
விரித்த குடைகள்
சட சட வென
முறிந்து போகிறது

இவைகள் ஆடும்
ஆட்டத்தில் அரங்கமான
தரையில்
கால் பாதம் வருடி
செல்லும் நீர் ஓட்டம்

உடைகள் எல்லாம்
நனைந்து
குளிரில் நடுக்கம்
வெட வெடக்கிறது

தொலைவின் தூரத்தில்
ஜன்னலில் பார்க்க
மழையும் காற்றும்
நாட்டியம் ஆடுவதாய்
கண்ணுக்கு தெரிகிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (17-Aug-20, 2:33 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 99

மேலே