ஒரு தந்தையின் தாகம்
நல்ல வரன் தா -இறைவா
இதை வரமாக தா
முன்னோர்கள் மகிழ
சான்றோர்கள் வாழ்த்த
ஊருசனம் கொண்டாட
வேண்டும் ஒரு நல்வரன்
வம்சம் தொடர
வாழையடி வாழையாக குலம் வாழ
மழலைகள் மடியில் தவழ்ந்தாட
வேண்டும் ஒரு நல்வரன்
மஞ்சள் குங்குமம் என்றும் நிலைக்க
சொல்லும் பொருளும் போல் இணைந்திருக்க
இல்வாழ்க்கை பயணத்தை இனிதே தொடங்க
வேண்டும் ஒரு நல்வரன்
இதை கொடுப்பதில் உனக்கு ஏன் தயக்கம் ?
கேட்பது என் உரிமை
கொடுப்பது உன் கடமை
பெற்றோரிடம் கேட்காமல் ,
யாரிடம் கேட்பது ?
இறைவா , மனம் இறங்குவாய்
மனையில் மங்கள வாத்தியம் ஒலிக்கச்செய்வாய்