பண ஓட்டம்
ஏராளம் ஏராளம் வீட்டில்
தாராளம் தாராளம் இல்லை மனதில்
ஏராளம் இல்லை என்றாலும்
தாராளம் உள்ளது எந்நாளும்
பாராளும் பரந்த உலகில்
பரம ஏழை இருந்திடுவான்.
விலைபோகும் பறந்த உலகில்
பரம்பரை பணக்காரன் வாய்த்திடுவான்.
ஏற்றம் தருவது ஏராளம்
தயவு தருவது தாராளம்
ஏற்றத்தின் முதல் வார்த்தை தாராளம்
தயவின் முதல் வார்த்தை ஏராளம்.