தேவை - பாவையின் பார்வை
தேவை - பாவையின் பார்வை
தைதை என வந்தாள் தையல்
கலகல என அசைத்தாள் வளையல்
துறுதுறு என பார்த்தாள் கயல்
தகதக என மின்னும் சாயல்
திருப்பாவை போய் தைப்பாவை வர
ஆதவன் வடக்கு நோக்கி வர
உள்ளத்தில் அன்பு பொங்கி வர
ஊர்க்கூடி பொங்கல் வைக்க
கழனி செழுமையாய் இருக்க
உழவன் உயர்த்து நிற்க
மாடு நலமாய் இருக்க
பாரதம் பாரில் ஓங்கி நிற்க
பாவையே வரம் தா
பசி பிணி பகை நீங்க
தேச பக்தியும் தெய்வ பக்தியும் வளர
பாரதம் மிளிர
அருள்புரிவாய் தைப்பாவையே
தேவை - பாவையின் பார்வை