எதிலும் நீயே
சூரியனும்
உறங்கி கிடக்கையிலே,
உதிக்கும் என் நினைவுகளில் எல்லாம் நீயே!!!
நிலவும்
காலையில் வருகையிலே,
விழித்திருந்த கண்களின் இடையில்
புதைந்துகிடப்பதும் நீயே!!!
கடலே
மௌனவிரதம் புரிகையிலே,
அலைஅலையாய் வந்து என் உணர்ச்சி கரையை தொடுவதும் நீயே!!!
மழையும்
குடைப்பிடிக்கையிலே,
என் மேனி ஈரங்களில் நனையாமல் இருப்பதும் நீயே!!!
உடைந்துபோன
வாழ்வினிலே,
சிதறிய சில்லில் எல்லாம்
சிரிப்பதும் நீயே!!!
வெட்கமெல்லாம்
விடுமுறை கேட்கையிலே,
என் முந்தானையின் முணங்கல் சத்தத்திலும் நீயே!!!
புயலும்
தளர்ந்துபோகையிலே,
உள்ளிழுக்கும் என் மூச்சிக்காற்றில் நிறைந்திருப்பதும் நீயே!!!
கண்ணீரும்
உயிர் கொள்கையிலே,
வழிந்த துளிகளில் எல்லாம் குடியிருப்பதும் நீயே!!!
இடைவேளையோடு
துடிக்கும் இதயத்திலே,
இடைப்பட்ட நேரத்திலும் இம்சையோடு இசைப்பதும் நீயே!!!
வார்த்தைகளும்
வற்றிப்போகையிலே,
வெளிப்படும் என் மொழிகளில் ஒளிந்திருப்பதும் நீயே!!!
ஆசைகள் எல்லாம்
கேலிபேசுக்கையிலே,
என் கவிதையில் உருகி வழிவதெல்லாம் நீயே!!!
ஊரே எனை பார்த்து
சிரிக்கையிலே,
என் காதலுக்கு உயிர் கொடுத்து அதில் விதைந்திருப்பதும் நீயே!!!
நீயே...நீயே...நீயே...
எதிலும் நீயே...
கல்லறை சேரும் வரை..
என்னில் கலந்திருப்பதும் நீயே!!!