மாதம் ஒரு திருநாள்
(ஆசிரியப்பா)
திங்கள் தோறும் திருநாள் உண்டு
சித்திரைத் தேர்கள் இத்தரைச் சிறப்பாம்
வைகா சிபரமன் விசாக விழாவாம்
ஆணி முத்துடன் ஆனி மஞ்சனம்
ஆடிப் பட்டமும் ஓடிடும் அம்மியும்
ஆவணி ஆனைமு கத்தோன் ஊர்வலம்
புரட்டாசிப் பொன்னுரு கப்பேயும் மழையும்
ஐப்பசி அடைமழைத் தீப ஒளியாம்
கார்த்திகைப் பரமன் குன்றெலாம் தீபம்
மார்கழி மண்குளி ரமாலவன் துதியாம்
தையிலே தைத்தஆ டைஏர் தழுவலாம்
மாசியிலே மகாமக உற்சவம்
பங்குனி உத்திரம் பரமன் திருத்தேரே
---ராஜ பழம் நீ (10-Aug-2017)