அரப்பாவின் திராவிட அகதியா தமிழன், அல்ல
(சந்த வஞ்சி விருத்தம்)
முன்னே அத்திரா விடருமே
உன்நாட் திற்குவந் தாராம்கேள்
உன்நாட் டைவிடுத் துக்குடியாய்
ஏன்நாட் டிற்குநீ போனதுசொல்!
அப்போ ஓர்கஜி னிவரநீ
தப்பி ஓடின தெவ்விடமோ
ஒப்பி லாதகோ ரிவரநீ
ஒப்பா தேகுடி போனதெங்கே?
எங்கோ டியது சொல்இடத்தை?
எங்குத் தங்கினாய் சொல்இடத்தை?
இங்கே யேஇருந் தாய்சரியா?
தங்கி ஆளவிட் டாய்சரியா?
---ராஜ பழம் நீ (10-Aug-2017)