மூவேந்தரே தமிழர்

வெண்பா
இந்தத் திராவிடத்தின் சொந்தம்மொத் தத்தெற்காம்
எந்த இலக்கியத்தி லும்காணோம் --- அந்தோ
அதுபாக் அரப்பாத் திராவிடராம் எங்கும்
செதுவில்லை யித்தமிழர்க் கு

சிந்துத் திராவிடர் ஆரியர்வ ரத்தெற்கில்
சிந்தைக் கலங்கி நகர்ந்தாராம் --- எந்தையின்
முந்தைத் தமிழ்ச்சனமெச் சந்தைசென்றார் நாடுவிட்டு
முந்தைச் சனம்யார் அவர்?

சந்த வஞ்சி விருத்தம்
தந்தா தந்தன தந்தான

முன்னே பத்துதே சம்காணு
தென்நாட் டின்தமி ழர்மூன்று
மன்னாம் மீன்புலி வில்லாம்சொல்
என்றே நம்புரா ணம்கூறும்
என்தமி ழர்தனி என்றேசொல்
பின்ஏ ழும்பிற ரின்தேசம்
பின்னே நம்தமி ழர்க்கேது
மற்றப் பேர்விளம் பும்தோழ!

அறுசீர் விருத்தம்

சொன்னார்அ கத்தியரும் பலஆயி ரம்வருடம்
முன்நாம்த மிழரென்று
சொன்னான்நாம் தமிழரில் லைத்திராவி டன்எனஅ
லெக்சாண்டர் வெள்ளையனே
கண்டானாப் கானிசம்ம ணிபூர்வங்கத் தில்எல்லாம்ந
மதெழுத்தி ருக்கிறதாம்
பின்ஏன்அ வர்எலாம்தி ரவிடர்எ னமறுக்கின்
றார்சொல்லும் தமிழரே !

##( சரித்திர ஆசிரியர் அலெக்சாண்டர் )


---ராஜ பழம் நீ (10-Aug-2017)

எழுதியவர் : palanirajan (10-Sep-17, 3:25 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 362

மேலே