எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு விடயத்தில் முடிவெடுக்க பலபேருடன் சேர்ந்து ஆலோசிப்பது தவறல்ல,...

ஒரு விடயத்தில் முடிவெடுக்க பலபேருடன் சேர்ந்து ஆலோசிப்பது தவறல்ல, ஆனால் முடிவெடுப்பதற்காகவே ஒருவனை பலரும் சேர்ந்து தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய முட்டாள் தனம்.

  -மன்சூர் 


ஆதி காலத்தில் யாருக்கு மிக பலம் அல்லது வசதி இருந்ததோ அவர்கள் அச்சுறுத்தலையும் பயத்தையும் காட்டி மற்றவர்களை அடிமையாக வைத்திருந்தனர்.
காலம் மாற மாற அவர்களின் யுக்தியும் மாறின.

 இன்று நாம் யார்க்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதை நாமே தேர்ந்தெடுக்கும் தன்மையை உரிமை என்ற பெயரால் உருவாக்கி விட்டனர்.  

மன்னர் ஆட்சியை விட மக்கள் ஆட்சியே சிறந்தது என ஒருவனை தேர்ந்தெடுப்பதும், மக்களால் ஆட்சியையே மாற்றி அமைக்க முடியும் என்றெல்லாம் நாம் பெருமைப்பட்டாலும் எப்போதும் நம்மை ஒருவர் கட்டுப்படுத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறார்.


பதிவு : மன்சூர்
நாள் : 29-Nov-19, 4:56 pm

மேலே