எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் நாடு நாட்டில்,  
பேனாக்களுக்கும் பஞ்சமில்லை
காகிதங்களுக்கும்  பஞ்சமில்லை
இருந்தும் ஏன் திருத்தப்படவில்லை 
நம் அரசியலமைப்புச் சட்டங்கள் ??  

மேலும்

வாலில்லா குரங்குகள் ஆடும் பகடி ஆட்டத்தில் பகடைக்காய்களாய் வாலில்லா குரங்குகள்.

மேலும்

விடியாது பொழுது.. முடியாது அழுதும் ...


ஆர்.கே நகர் ஐயா தினகரன்
இன்று ஆலவாய் நகர்(மதுரை)
வருகையாம்...
ஹீம்...
தினகரன் வருகைக்கு கரம் உயர்ந்தும் இளைய சமூகமே!..
உன் கரம் தினம் தினம் உயர்ந்தால் எல்ளளவும் உயராது நம் தமிழ் சமூகமே...

மேலும்

அரிவாள் எடுத்து வெட்டும் ரவுடிக்கு அரசியலில் என்ன வேலை?

போகவேண்டியதான அப்படியே !

மேலும்

சில நேரங்களில் நாம் ஏந்த வேண்டிய ஆயுதத்தை எதிராளியே தீர்மானிக்கின்றான்..... அவன் அரசியல்வாதியானாலும்.... 08-Mar-2018 11:13 am

பெட்ரோலின் விலையை
பத்து ரூபாய் ஏத்திவிட்டு போ

பேருந்து கட்டணத்தை
நூறு ரூபாய் ஏத்திவிட்டு போ

ஜி எஸ் டி ஹெச் எஸ் டி
ஐ எஸ் டி ஜே எஸ் டி
இன்னும் கூட
ஆங்கில எழுத்துக்களில்
எல்லா ஆல்பாபெட்டிலும்
வரிக் கொண்டு வா..

சிரித்த முகத்தோடு
ஒழுங்காய் கட்டுகிறோம்..

வியர்வையை உடலில்
கசியவிட்டு
மன அழுத்தத்தை
தவிர்க்க முடியாமல்
அனுபவித்துக் கொண்டு
குடும்பத்தை யோசித்து
பார்க்கின்ற வேலையில்
வருமானத்தை ஏத்திட
வகை மட்டும் செய்து கொடு
என் தேசத்து அரசாங்கமே..

ஊதியத்தை உயர்தாமல்
வரியையும்
விலையயும்
நீ ஏற்றுவதென்பதெல்லாம்
உன் வசதிக்காக
தாயை கூட்டிக் கொடுப்பது
போலே மட்டும் தானே?

மேலும்

அணுக்களை பிளந்தும்
அவைகளை இணைத்தும்
வெடிக்கச் செய்து
உடல்களை பிளந்தார்கள்..

சிரியாவோ
இல்லை சிலோனோ
செத்துவிட யாருக்கும்
நமகெல்லாம்
மனம் என்பததில்லை..

வாக்கிட்டு வாய்க்கரிசி 
வாங்கிக் கொள்வது
நமக்கெல்லாம்
வாடிக்கையாய் ஆனது..

என்ன தான் பட்டாலும் கூட
தேர்தல் வரும் போது
ஒரு பொரிக்கியை
தேர்ந்தெடுத்தே
நாம் தான் பழகிவிட்டோம்..

உத்தமன் எவனும் இல்லை
உன்னை வாழ வைக்க
செத்திட எவனும் இல்லை

இனியேனும் யோசி

அரசியல் சம்பாதித்து
சேர்த்து வைத்திடும்
ஓர் தொழில் என்றானது..

அன்பை ஒழுக்கத்தை
கருணையை
சுயமரியாதையை
சக மனிதனோடு காட்டி
நம்மை நாமாக
வாழ வைத்து பழகுவோம்..

மோடியும் புறம்போக்கு..
மேலாதிக்கம் செய்யும்
அமெரிக்க ட்ரம்பும்
புறம்போக்கு மட்டும் தான்..

நாட்டையும் நம்மையும்
வாழ வைத்திட
சக மனிதனை 
அன்பு செய்திட பழகுவோம்..

மேலும்

கருப்பு பணம் : அரசியல் உண்மைகள் – நூல் அறிமுகம்

கருப்புப் பணம் என்பது சட்ட விரோதமான முறையில் சம்பாதித்த பணம், அரசியல்வாதிகள் ஊழல்களின் மூலம் கொள்ளையடித்த பணம் என்பதும் பணக்காரர்களின் நிலவரை பெட்டிகளிலும், வெளிநாட்டு வங்கிகளிலும் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்பதுவுமே பாமரர்கள் மட்டுமின்றி படித்தவர்களிடமும் நிலவும் கருத்தாகும்.

கீழைக்காற்று வெளியீட்டகம் நூலாகக் கொண்டு வந்துள்ள கருப்பு பணம்: அரசியல் உண்மைகள் என்ற தலைப்பிலான கட்டுரைகள் கருப்புப் பணம் புழங்கும் மாய உலகத்திற்குள் வாசகரை அழைத்து சென்று அதன் உருவாகத்தையும் கையாளப்படும் விதங்களையும் அது குடி கொண்டிருக்கும் இடங்களையும் திரை விலக்கிக் காட்டுகிறது.

கருப்புப் பணம் என்பது என்ன, அது எங்குள்ளது, யார் கட்டுப்பாட்டில் உள்ளது, எப்படி கையாளப்படுகிறது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கின்றன இந்நூலில் உள்ள கட்டுரைகள். மேலும், கணக்கு காட்டாமல் கொள்ளையடித்த பணம் கருப்பை வெள்ளையாக்குவதற்கு சட்ட பூர்வமாகவே இருக்கும் வழிமுறைகள் மூலம் வெள்ளையாக்கி சுழற்சியில் விடப்படுகிறது என்பதையும் விளக்குகிறார் ஆசிரியர்.

பொருளாதாரம் கடினமானது, மக்களுக்கு புரியாது என்ற பெயரில் கருப்பு பணம் பற்றி தெளிவில்லாத மேம்போக்கான கருத்துக்களை வெளியிட்டு ஊடகங்களும் கூட மக்களை அறியாமையில் நீடிக்க செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்நிலையில் கருப்புப் பணம் பற்றி எளிமையாக புரிந்து கொள்ளும் வகையிலான கட்டுரைகளை தொகுத்து தருகிறது இந்நூல்.

தேர்தல்களில் வாக்குகளை விலைக்கு வாங்குவதற்கு மட்டும் இந்திய ‘ஜனநாயகத்தில்’ பங்காற்றி வந்த கருப்பு பணம் 2011-ம் ஆண்டில் முக்கிய நிகழ்ச்சி நிரலுக்குள் வந்த பின்னணியை விளக்குகிறது இந்நூல். 2G, ஆதர்ஷ், காமன்வெல்த் என பல்வேறு ஊழல் விவகாரங்கள் அம்பலமானதாலும், விலைவாசி உயர்வு போன்ற பொருளாதார நெருக்கடிகளாலும் உருவான மக்கள் கொந்தளிப்பை ஆற்றுப்படுத்த கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவை வளப்படுத்த வேண்டும் என்று காந்தியவாதி அன்னா ஹசாரே முதல் கார்ப்பரேட் சாமியார் பாபா ராம் தேவ் வரை கருப்புப் பணம் பற்றி பேசாதோரே இல்லை.

மக்கள் கொந்தளிப்பை அறுவடை செய்துகொள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவை வளப்படுத்துவோம் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தது, பா.ஜ.க. 2014 தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு வந்து நாட்டு மக்களின் வங்கிக்கணக்குகளில் தல பல லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்று சவடால் அடித்தார், மோடி. ஆனால் இன்று வரை வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்திய முதலாளிகளின் பட்டியலை வெளியிடக்கூட மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு முன்வரவில்லை.

இந்தியப் பொருளாதாரம் ஏறு முகத்தில் இருப்பதாகவும், கூடிய விரைவிலேயே இந்தியா வல்லரசாகிவிடும் என்றும் மேட்டுக்குடி வர்க்கம் சவடால் அடித்து வரும் நிலையில் செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பிய இந்திய அரசால் இணைப் பொருளாதாரத்தில் புழங்கும் பல பத்து லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலா கருப்புப் பணத்தில் ஒரு பைசாவைக் கூட மீட்க முடியவில்லை.

இப்போது மட்டுமல்ல எப்போதும் இவர்களால் கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர முடியாது என்று 2011-ல் வெளியான கட்டுரையில் விளக்கப்பட்டிருப்பதை நிரூபிக்கும் விதமாக, முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் கருப்புப் பண பட்டியலை வெளியிட மறுத்ததற்காக நாடாளுமன்றத்தில் சண்டமாருதம் செய்த பா.ஜ.க, ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் பாடிய அதே பல்லவியை பாடுகிறது. ஊடகங்களின் தாளம் மட்டும் வேறாக உள்ளது.

அன்று, ‘ஊழல் பெருச்சாளிகளான காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியின் அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டு வங்கிகளில் பணம் இருப்பதால் தான் அவர்கள் பட்டியலை வெளியிடவில்லை’ என்பது போல பிம்பத்தை ஏற்படுத்தின, அன்று துக்ளக் உள்ளிட்ட பத்திரிக்கைகள். அதே பத்திரிகைகள் இன்று கருப்பு பண விவகாரத்தில் காங்கிரசின் விளக்கங்களை தாங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என பொழிப்புரை வழங்குகின்றன. இவர்கள் இப்படி குரங்கினும் கேவலமாக பல்டி அடிப்பது ஏன் என்பதையும் இந்த நூலிலிருந்து புரிந்து கொள்ளலாம்..

நிலப்பதிவின் போது முத்திரைத்தாள் வரியை குறைக்க கொஞ்சம் வெள்ளையாகவும், மீதி கருப்பாகவும் கைமாற்றப்படும் என்று ‘அந்நியன்’ படப் பாணியிலும், கருப்புப் பணம் அத்தனையும் வெளிநாட்டு வங்கிகளில் கட்டுகட்டாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று ‘கந்தசாமி’ பட பாணியிலும் புரிந்து வைத்திருப்போர் கட்டாயம் படித்து புரிந்து கொள்ள வேண்டிய நூல் இது.

மேலும்

நான் முதலமைச்சர் ஆனால்

முதலமைச்சர் கனவுல தமிழ் நாட்டுல
பல பேரு வருச கட்டி நிக்கிறப்போ நமக்கு
அந்த வாய்ப்ப இங்க எனக்கு கொடுத்து
இருக்காங்க!

சரி.. நெஜமாவே முதல் அமைச்சர் ஆயிட்டா ?
என்ன செய்யலாம் அப்படின்னு ராப்பகலா
படு பயங்கரமா யோசனை பண்ணின விளைவுதான்
இது. இத மொக்கையா எடுத்துகிரவங்க மொக்கையா
எடுத்துக்கலாம், சீரியஸா எடுத்துகிரவங்க சீரியஸா
எடுத்துக்கலாம்.

அதாவது!''சிறந்த குடி மக்களை உருவாக்கும் திட்டம்''

பத்தாவது வரை படிச்சவங்களுக்கு 1 புள்ளி

+2 படிச்சவங்களுக்கு 2 புள்ளி

டிகிரி படிச்சவங்களுக்கு 3 புள்ளி

அதுக்கு மேல படிச்சவங்களுக்கு 4 புள்ளி


ரத்த தானம் பண்ணினா ஒரு தடவைக்கு 2 புள்ளி

5 தடவை ரத்த தானம் பண்ணினா போனஸ் 5 புள்ளி

கண் தானம் பண்ணினா 10 புள்ளி

ஓட்டு போட்டா 2 புள்ளி

தொடர்ந்து 3 தடவை ஓட்டு போட்டா போனஸ் 5 புள்ளி

ஒரு குழந்தை பிறந்த உடன் குடும்ப கட்டுப்பாடு பண்ணிகிரவங்களுக்கு

5 புள்ளி 2 குழந்தை பிறந்த உடன் பண்ணிகிரவங்களுக்கு 2 புள்ளி

அஞ்சு வருஷம் எந்த போலீஸ் கேஸ் ஏதும் இல்லாதவங்களுக்கு 5 புள்ளி

வருமான வரி கட்டினா 5 புள்ளி

புள்ளைங்கள குறைஞ்ச பட்சம் பத்தாவது வரை படிக்க
வைச்சா 5 புள்ளி

சாலை விதிகளை சரியா கடை பிடிச்சா 5 புள்ளி

( சாலை விதிகளை சரியா கடை பிடிக்கிறத எப்படி
கண்டு பிடிக்கிறது? அது யோசனைல இருக்கு )

இப்படி அதிக புள்ளிகள வாங்குறவங்களுக்கு
சிறந்த குடிமன், குடிமகள் சான்றிதழ் வழங்க
படும். புள்ளிகள் வழங்குதல் அந்தந்த துறைகளில்
பெற்று கொள்ளலாம்.

இதற்கென தனி அமைச்சகம் உருவாக்க படும்.

இதனால் என்ன பலன் ,,,

சிறந்த குடி மக்களுக்கு வங்கி கடன் வழங்குதல்
எளிதாக்கப்படும்.

இலவச மருத்துவ காப்பீடு வழங்க படும்.

கல்வி துறையில் இவர்களுக்கென தனி இட
ஒதுக்கீடு வழங்க படும்

ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு
கணிசமான அளவு பென்சன் வழங்க படும்.

பஸ்,ரயில்,விமான கட்டணங்களில் சலுகை
அளிக்கப்படும்


மேலும் ஆலோசனைகள் உங்களிடம்

எதிர்பார்க்க படுகிறது.

மேலும்

இன்சென்டிவும் இலவசமும் நிர்வாக வழிமுறை இல்லை. இரயில் விமான பயணம் இலவசம் 5 நட்சத்திர விடுதியில் தங்கல் இலவசம் இலவசம் சோம்பேறிகளை வளர்க்கும். உழைக்கும் குடிமகனை உருவாக்காது. 50 தில் ஓய்வூதியம் அதுவும் கணிசமாக ? Am I correct RAJ ? Sinthikka vivaathikka 28-Sep-2017 8:40 am
இப்படி சிந்தித்தமைக்கு உங்களை பாராட்ட வேண்டும் ... இப்படிப்பட்ட சிந்தனை பல உள்ளங்களில் எழும்போது அரசியல் சாக்கடை சுத்தம் ஆகிவிடும் . நடிகர்கள எல்லாம் அரசியலுக்கு வராங்க நல்லது செயறவனுக்கு எல்லாம் அரசியல் ல வர தைர்யம் இல்ல. சோ மனு தாக்கல் பண்ணிடுங்கோ 28-Sep-2017 1:23 am
முதலமைச்சர் வேட்புமனுதாக்கல் செய்யும்போது என்னை தொடர்பு கொள்ளவும் உங்களுக்காக தேர்தல் வேலைகள் சிறப்பாக செய்கிறேன் எங்கள் ஒட்டு உங்களுக்குத்தான் வெற்றி பெற கடமை கண்ணியம் கட்டுப்பாடு அரசியல் மேலாண்மை நமக்கு இருந்தால் வெற்றி உறுதி 27-Sep-2017 10:18 pm
மேலும்...

மேலே