PrabhuKumar Nageswari - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : PrabhuKumar Nageswari |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 04-Apr-1992 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Mar-2019 |
பார்த்தவர்கள் | : 202 |
புள்ளி | : 16 |
நிலவே உன்னை நித்தம் எண்ணி
நித்திரையில் தீக்குளிக்கிறேன்...
கனவாய் நீ கலைந்து போக
கண்ணில் கண்ணீர் வடிக்கிறேன்...
ஏதோ ஒன்று என்னிடம் சொல்ல
வருகிறாய் என்று நினைக்கிறேன்...
சொல்லும் அந்த சொற்களில் இடறி
திரும்பிச் செல்வதால் துடிக்கிறேன்...
காலையில் தினம் உன்னைக் காண
வானத்தில் நானும் கலக்கிறேன்...
மீண்டும் நீ இரவில் வலம்வர
நினைவில் தவம் இருக்கிறேன்...
பௌர்ணமியாய் சிலநாள்
முழு இரவாய் சிலநாள்
மாற்றங்கள் ஏற்று மீண்டும்
மறுஜென்மம் எடுக்கிறாய்...
காதலில் உன்னை வெறுப்போர் இல்லை
காயத்தில் உன்னை மறப்போர் இல்லை..
வெறுப்பதும் மறப்பதும் காதல் என்றால்,
அந்த காதலே எனக்கு உன்மேல் இல்லை...
பரந்த வானில்
தொலைந்த நட்சத்திரங்கள்
அவளது நினைவுகள் ...
தொட முடியாவிட்டாலும்
தொடர்ந்துகொண்டே இருக்கும்
அவளது நினைவுகள் ...
காலத்தாலும் கலைக்க முடியாத
கரு ,அவளது நினைவுகள் ...
எதிர் பார்க்காத இடத்திலும்
ஏமாற்றம் தரும்
அவளது நினைவுகள் ...
குடைக்குள்ளும் மழையாய்
அவளது நினைவுகள் ...
கூரையிலும் கோபுரமாய்
அவளது நினைவுகள் ...
அடியின் வேராய்
அவளது நினைவுகள் ...
ஆழத்தின் விழுதாய்
அவளது நினைவுகள் ...
தேடாமல் கண்டெடுத்த
தெய்வத்தைவிட்டு
தேடித் திரிந்தேன்
தெருக்கள் எல்லாம்...
அம்மா!!!
நீ திட்டும் பொழுதெல்லாம்
சீண்டினேன் -இன்று
உன் திட்டல் என்னைத் தீண்ட
வேண்டினேன்...
காற்றுடன் போட்டியிட்டேன்
சுற்றித்திரிய - இன்று
காத்திருக்கிறேன் உன்
கட்டுப்பாட்டில் கிடக்க...
ஆசைகள் ஆயிரம் உண்டு
அன்னை உன் மடியில் படுத்து பேச,
இருந்தும் நாட்கள் கிடைக்கவில்லை
உன்னை காண...
அம்மா ,
உன்னை கட்டியணைத்து
கதைகள் பல பேசவேண்டும்,
உன்னை பிரிந்து நான்
பட்ட வேதனையையும்
தொட்ட துயரத்தையும்
கண்ணீரில் பேச வேண்டும்..
எங்கேயோ நீ- உன் நினைவில்
இங்கே நான்.
வாழ்க்கை தேடி