அழகான பெண்ணவள்

அழகான பெண்ணவள்,
அவள் தானே என்னவள்.
என் அருகே இருப்பவள்,
என் உயிரோடு கலந்தவள்..

அவள் சிரிப்பிலே நான் மயங்கினேன்,
விட்டு விலகவே நான் தயங்கினேன்.
அவள் சிரிப்பிலே நான் மயங்கினேன்,
விட்டு விலகவே நான் தயங்கினேன்.

தினமும் என்னை என்றும் நெஞ்சோடு அனைத்துக் கொண்டாள்.
தனக்கென பிறந்த பிள்ளையாய் என்னை எண்ணிக் கொண்டாள்.
இவள் போல் ஒருவளை நானெங்கு தேடுவேன்?

அழகான பெண்ணவள்,
அவள் தானே என்னவள்.
என் அருகே இருப்பவள்,
என் உயிரோடு கலந்தவள்.

எழுதியவர் : மன்சூர் (15-Jul-17, 9:32 am)
சேர்த்தது : மன்சூர்
Tanglish : azhagana pennaval
பார்வை : 219

மேலே