பூ என்றேன்
என்னைக்
கவிதையில் சொல் என்றாள்
பூ என்றேன்
ஓரெழுத்து கவிதையா ?
கவிதை வராதா என்றாள்
பூவிற்கு எத்தனை இதழ்கள்
எத்தனை அழகு
எத்தனை வாசம்
பூவின் தேன் எத்தனை இனிமை
எண்ணிப் பார் என்றேன்
மெல்லிய புன்னகைப் பூ ஒன்றை
உதிர்த்து நடந்தாள்
-----கவின் சாரலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
