ஜெர்ரி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜெர்ரி |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 29-Apr-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 1026 |
புள்ளி | : 159 |
அனுபவத்தை...
எழுத்தாக செதுக்க முயற்சிக்கிறேன்...!
விரைவில்...
அழகிய சிலையா மாறும்...!!
என்ற நம்பிக்கையில்...!!
- சித்ரா தேவி கா (ஜெர்ரி)
இன்று
நான் முட்டாளாய்
இருப்பது வலிக்கவில்லை
யாரை என்
அறிவாக நினைத்தேனோ
அவர்களால் முட்ளாக்கப்பட்டதே
அதிகம் வலிக்கிறது......
எனக்கு நானிருக்கிறேன்
என்று
எனக்கு நானே
எடுத்து சொல்லும்
பக்குவத்தை
எனக்கு தந்தது.......
-"தனிமை"-
நம்பிக்கையில்..
பகிர்ந்த இரகசியங்களை...
பிறர் வாய்க்கு
விருந்தளிக்கும்துரோகிகள்...
உறவுகளாய் உடன்
நிற்பதை விட...
எதிரியாய் எதிரில்,
நிற்பதே சிறப்பு...!!
இரக்கத்தின் வாழ்வு...
கண்களில் தொடங்கி,
இதயத்தை தொடும்,
பயணதூரம் மட்டும்...
வாழ்ந்து மடிகின்றது
- இன்றைய,
இயந்திர வாழ்வில்...!
தவறிய அழைப்புகள் கூட
சிறிது தயக்கம்கொள்ளவைக்கிறது
தவறவிட்ட நண்பர்களை
நினைவுபடுத்த
ஒலியுடன் கூடிய ஒருவலியாக
மனதுக்குள்
அழகு என்ற
வார்த்தை கூட,
கூடுதல் அழகாகிறது - அந்த
அழகை உன்,
முகத்தில் பார்க்கும் போது...!!
Written by JERRY
உந்தன் இதழ் பேசும்
மழலை மொழியில்...
மயங்கி தினமும்...
கேட்டுக் கொண்டே,
இருக்க வேண்டும் - என்று
போராடுகிறது - எந்தன்
உள்ளம் என்னோடு ...!!!
Written by JERRY