யாரேனும் வர வேண்டும்

குழந்தாய் நீ குழந்தாய்,
நீ சிரிக்கும்போதே இறந்தாய்..
குழந்தாய் நீ குழந்தாய்,
நான் இருக்கும்போதே இறந்தாய்..

உன்னோடு இருந்த, உன்னோடு இறந்த,
எல்லோருக்கும் அழுகிறேனே
கண்ணீர் மழுக..
வரம் ஒன்று வேண்டும், நீ உயிரோடு இருக்க,
யாரேனும் வர வேண்டும் இந்த போரை தடுக்க..

இது விதில்லையே, வெறும் சதியானதே,
எங்கேயும், எப்போதும், மழையாகுதே,
வெடி மழையாகுதே..

குழந்தாய், நீ குழந்தாய்,
நான் இருக்கும்போதே இறந்தாய்..
குழந்தாய், நீ குழந்தாய், இதை
காணத்தானா பிறந்தாய்...

எழுதியவர் : மன்சூர் (9-Mar-18, 10:39 pm)
Tanglish : yarenum vara vENtum
பார்வை : 226

மேலே