அழகெது

பூ உதிர்ந்து சிரித்தது
அழகென்றான் நண்பன்
புன்னகை உதிர்த்து சிரித்தாள்
அழகென்றேன் நான்
பல் உதிர்ந்தும் சிரிக்கிறேன்
அழகில்லையா என்று கேட்டாள்
அருகில் ஒரு மூதாட்டி !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Mar-18, 10:07 pm)
பார்வை : 135

மேலே