கெட்டிமேளம் தான்

ஏதேதோ பெயர் சொல்லி அழைத்தேன் அவனை...
அத்தனைப் பெயரிலும் அத்தனைக் காதலைக் கொட்டி தீர்ப்பேன்...
ஆனால்
பெயர் மட்டும் கடிந்து கொள்வது போலத்தான் வைப்பேன்...
அத்தனைப் பேரும் ஆயிரம் முறை என்னைக் கடிந்திருப்பர்...
விட்டால் கடித்து கூட இருப்பர்...
ஏனோ யாருக்கும் புரியாத அந்த காதல் அவன் காதில் விழுந்த வார்த்தைகளால் அவனுக்கு மட்டும் புரிந்தது...

"எருமை! திரும்பி பார்க்கிறானா பார்" என்று நான் மறைந்து நின்று சொன்ன போது

அவனை மறந்து என்னை பார்த்து விட்டான்

பிறகென்ன

கெட்டிமேளம் தான்!

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (14-Nov-24, 7:05 pm)
Tanglish : kettimElam thaan
பார்வை : 21

மேலே