என்னைப்போலவே

அடியே...
விழித்திருந்தேன் விடிய விடிய
படுத்துக்கிடந்தேன் உன் அருகிலேயே
வலியிலும் உனை ரசித்து சிரித்த நான்
சிறிதளவும் உன்னை விலகவில்லை
பால் குடிக்க பழகாத நான் மணிக்கு ஒருமுறை
பால் கொடுக்க மறந்ததில்லை
கொஞ்ச நேரம் என் கண் அசந்தாலும் உன்னை அசந்து கொஞ்ச மறந்ததில்லை
மகளே...
மடி நிறைந்த நீ தான் என் மனது முழுக்க நிறைந்திருந்தாய்
அணைத்து அணைத்து உறங்க வைத்து
படுக்கை விட்டு நான் இறங்க
உறங்கி விழித்த நீ
எழுந்து அழைத்ததென்னவோ
ஆயிரம் முறை "அப்பா" என்று தான்!
என்னைப்போலவே!!