தமிழ் மொழியின் பெருமை : உலகில் எந்த ஒரு...
தமிழ் மொழியின் பெருமை :
உலகில் எந்த ஒரு மொழிக்கும் இல்லாத,
எந்த ஒரு மொழியும் கொண்டிராத,
பல தனிச்சிறப்புகளை, தன்னகத்தே கொண்டது,
நம் தாய் தமிழ் மொழி என்றால் மிகையல்ல !
அவற்றுள் சிறப்பானதொன்று,
" ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் " .
பாருங்கள் நண்பர்களே,
ஒரெழுத்தில்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்,
நம் தாய் தமிழ் மொழியில் !
அவற்றுள் சில :
அ - சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
உ - சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து
கோ - அரசன், தந்தை, இறைவன்
" வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே "
#பாரதி