எண்ணம்
(Eluthu Ennam)
தகப்பன் சாமி...!
அப்பாவின் தோள் மீது ஏறி சாமி பார்க்கும் பால்யத்தில் தெரிந்ததேயில்லை சாமியின் தோள் மேல்தான் இருக்கிறோம் என்று...!
பெரும்பாலன தகப்பன்களின் நிலையும் இதுதான் அவர் தோள் மீதிருக்கும்போது புரியவதில்லை.
பத்து வயது வரை அப்பாதான் ஹீரோ ..
இருபது வயது வரை எதிரி போல..
நாற்பது வரை யாரோ போல...
அதற்கு மேல அப்பாதான் கடவுளுக்கும் மேல.
வீட்டில் அம்மா இல்லைனா அடுத்த நொடியே அம்மாவாகி விடுவார்.
(வெளியே சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கதே நான் சமைக்கிறேனு சொல்லுவார் ஆனா அதை வாய்'ல வைக்கமுடியாது அது வேற விஷயம்)
அவர் சாப்பிடும் நள்ளிரவு நேரத்திலும் அவன் சாப்ட்டா'னானு கேட்ப்பார்.
அந்த ஒற்றை வார்த்தையில் ஒளிந்துயிருக்கிறது ஒட்டுமொத்த பாசமும்.
அப்பாவின் தியாகமும் பாரமும் புரியவேண்டுமெனில் அவர் தோளிலிருந்து இறங்கி பாருங்கள்,
அடுத்த நொடியே இந்த உலகம் உங்கள் தோள் மீது ஏறிக்கொள்ளும்.
நம்மை பத்து மாதம் சுமந்த அம்மாவின் கருவறை மட்டுமல்ல...
நம்மை சுமந்த அப்பாவின் தோள்களும் போற்றுதலுக்குரியதுதான்.
வாழ்க்கையில் வெற்றிபெற்ற எல்லா மகன்களுக்கு பின்னாலும்
வாழ்க்கையில் தோற்றாதொரு அப்பா நிச்சயம் இருப்பார்.
அம்மாவின் கண்ணீரை கடந்து விடலாம் ஆனால் அப்பாவின் கண்ணீரை அவ்வளவு எளிதாக கடக்கமுடியாது யுகம்யுகமாய் நெஞ்சில் நின்று கொல்லும்..
பெரும்பாலான தகப்பன்கள் மகன்கள் முன்னால் அழுவதில்லை
ஏனெனில் அதுதான் அப்பா...!
அப்பா ரொம்ப கோபக்காரர் என்ற உருவகத்தை அம்மா நம்மிடம் பதிய வைத்திருப்பார் காரணம் அது அம்மாவின் விளையாட்டு அரசியல்.
அம்மா நம்மளை வலிக்கதா மாதிரி அடிப்பங்க...
அப்பா நம்மளை அடிச்சிட்டு
அவர் அழுவார்....
நமக்கு எப்போவும் வில்லனா தெரிவார்
நம்ம பிள்ளைகளுக்கு அவர் ஹீரோவா தெரிவார் டிசைன் அப்படி.
இதெல்லாம் எங்க உருப்படபோகுது'னு அம்மாவிடம் சொல்லிட்டு தனது நண்பர்களிடம் நான்தான் அவனை சரியாக புரிஞ்சிக்கலனு சொல்லும் மழலை மனசு'காரர்கள்'தான் தகப்பன்கள்.
நம்ம பிள்ளைகளின் மேல் பாசத்தை பொழியும் போதுதான் தெரியும் நம்ம அப்பாவுக்கு இவ்வளவு பாசம் இருக்குதானு, பாசத்தை கூட வெளியே காட்டத் தெரியாதா வெள்ளந்தி'தான் தகப்பன்கள்.
யாரை பற்றியும் தெரிந்து கொள்ள பழகினால் போதும் ஆனால் அப்பாவை பற்றி புரிந்துகொள்ள நம் அப்பா'வானல் மட்டுமே முடியும்
அம்மா சொல்லி முடிக்க முடியாத சரித்திரம்...!
அப்பா சொல்லப்படதா சரித்திரம்...!
MY FATHER IS NOT MY FATHER
HE IS MY GOD FATHER..!
தமிழ் மொழியின் பெருமை :