மழையின் வரவு

எவ்வளவு அழைத்தும்
வரவில்லை ..காக்கை
அமாவாசை ..
எனக்கோ பசி ..!

நான் மூன்று பருவத்தினனாகவும்
மாறி மாறி பேசிப் பார்க்கிறேன் ..
அவள் புன்னகையில்
சந்தேகம்!

இளங்குளிர் காற்றில்
பனிமலையில் அவளோடு
கைகோர்த்தபடி நடக்கிறேன்..
இளஞ்சூடு !

அவள் உதிர்க்கும்
ஒவ்வொரு வார்த்தையையும்
மனனம் செய்து கொள்கிறேன் ..
உதவும்..!

ரசிப்பதை
மறைத்துக் கொள்கிறேன்
உலக விஷயங்கள்
பேசிக்கொண்டே !

ஏதோ ஒரு பறவையின்
அந்தி நேர கூவல்
அவளது வளையோசை
பிடிக்கிறது !

புரிபடாத அவளின் நகர்வுகள்
மேலே ஒரு பறவை
நிழலின் வழிதான்
பயணம் !

பக்கத்தில் ஆறு
எங்களோடு கூடவே
நகர்கின்றது ..மனமின்றி
தொடாமல் !

மழை வரும் போலிருக்கிறது
என்கிறேன் ..
குடை வேண்டாம்..
வரட்டும் என்கிறாள் !

....கருணா....

எழுதியவர் : கருணா (21-Nov-17, 6:40 am)
Tanglish : mazhaiyin varavu
பார்வை : 181

மேலே