லூசு ம்ம்

லூசு ம்ம்

அழுதேன்,, பின் சிரிச்சேன்
உனக்கு பிடிக்காதது எதுவும், எனக்குமே பிடிக்காது
சிலபோது நீ
ஒதுங்கி இருந்த
நானும் என் ஆழ்ந்த காதலோடு
மேலோட்டமா கடந்தேன்
சிலபோது நீ
நெருங்கி வந்த
நீ திரும்பி போகும் முன்ன
அப்போ நா உன்னை நெருங்கி வந்தேன்
சிலபோது நீ ,
காதலிக்கிறேன்னு சொன்னேன்
அதை எனக்கான வரமாக்கினேன்
சிலபோது நீ
கோபப்பட்ட
எதுக்காக ன்னும் தெரியுமே நான் வருத்தப்பட்டேன்
சிலபோது நீ
சண்டை போட்ட
நான் உன்னையே என் பிரபஞ்ச கடல் செய்து
நாணல் போல வளைஞ்சு கொடுத்தேன்
சிலபோது நீ
மனக்குழப்பத்தில் இருந்த
அப்போல்லாம் நான், தெளிவு படுத்திக்கிட்டே இருந்தேன்
சிலபோது நீ
சாப்பிட்டே இருக்கமாட்ட
அப்போல்லாம் நான்
நீ சாப்டியோ இல்லையோ ன்ற வெசனத்திலேயே
காலம் தள்ளிக்கிட்டிருந்தேன்
சிலபோது நீ
என்னை சாப்பிட்டியான்னு கேப்ப
நான் வயித்து பசியை மதிக்காத ஜடமாகிட்டேன்னு
உன்கிட்ட சொல்லாம மறைச்சிருப்பேன்
சிலபோது நீ,
நான் பேச பேச
எதுவுமே பேசாம இருப்ப
அப்போல்லாம் நான் லேட்டா பேசறதனாலதான்
என் மேலே உனக்கு கோபமோ ன்னு
நினைச்சுப்பேன்
சிலபோது நீ
எங்க இருக்கன்னு என்னை கேப்ப
நீ என்னை தேடுவியோன்னு
உனக்காகவே நான்
நேரம் ஒதுக்கி
வீட்டுக்கு வந்ததும்
ஷூ கூட கழட்டாமே, முகம் கழுவாமே
கால் பண்ணுவேன்
சிலபோது,
நம்ம பேசிக்க சமயமே கிடைக்காம போயிருக்கும்
அப்போல்லாம்
அன்னு சொன்னது போல
வெற்றுச்சுவரையும், நிழலையும்
நீயாக்கி பேசிப்பேன்

சண்டைப்போட்டு போகும்போதெல்லாம்
இந்த பிணக்கம்
இன்னைக்கோ நாளைக்கோ மாறிடும் ன்னு
நினைச்சுட்டுதான் போயிடுவேன்,
அது உண்மைங்கிறதுபோலவே,
மறுநாள் நீயா வந்து பேசத்தொடங்குவ,
அப்படி நினைச்சுத்தான்
இப்போவும் போறேன்
இதெல்லாம் வெறும் நாடகமா இருக்கணும்னு
இறைஞ்சுகிறேன்,
உன் பிணக்கம் மறையும் தருணம்,
உன் அருகில்
பேச நான் இருப்பேனா தெரியாது,
உனக்கு பிடிச்ச
சன்னப்பின்ன மழையிடமோ,
ஏதோ ஒரு நாளின்
பௌர்ணமியிடமோ
உன் வாசனையை சொல்லியனுப்பு ,

காதலுக்குள்ளயும்
அன்புக்குள்ளயும்
ஒரு பூக்குழந்தைத்தனம் இருக்கும்
அதுதான்
விளையாட்டுத்தனமா
எங்கோ நான் இருக்கும்போது
நீ தலைவலி ன்னு சொல்லும்போது
தொலைப்பேசி மூலம்
எனக்கு தெரிஞ்ச
பாட்டு பாடி உறங்க செய்வேன்
இல்லேன்னா
நீ கண்ணை மூடு
என் விரல்களைப்பிடிச்சுக்கோ
உறங்கு
உன் தலை புடிச்சு விடறேன்
உன் பக்கமே நா இருக்கேன் ன்னு சொல்றதெல்லாம்
இதெல்லாம்
எப்போதுமே நாம நமக்குள்ள
இழந்துட கூடாதுன்னே
பார்த்துக்கிட்டேன்
ஒருவேளை உன்கிட்ட அது இழக்கும்போது
சலிக்கும்போதுன்னு
உனக்கு சொல்லவே
புதிய கதைகளை உருவாக்கி வச்சேன்
எதுவரை
உனக்கு என்னைப்பிடிக்குமோ
அதுவரை உன்கூட சேர்ந்தே நடப்பேன்
அப்படியே
நீ இழந்தால் தான் என்ன
என்னை இழந்து
நீ போனால் தான் என்ன
கண்ணீரை
ஒரு எல்லைக்குமேலே ஏறவிடாமே
தொண்டைக்குழியிடையே
அடக்கி வச்சுட்டு
டாட்டா பை பை சொல்லி
சிரிச்சுகிட்டே
உன்னை வழியனுப்பும்
புதிய தைரியமான விளையாட்டையும்
கத்து வச்சிருக்கேன் ம்ம்ம்

இங்க எங்கயாவது உன் நடமாட்டம் இருந்தா
இங்கதான் இருக்கன்னு சொல்லி
சமாதானப்பட்டுப்பேன்
அதிக நேரம்
உன் கால்தடத்தோட வாசனை குறையும்போது
என்னை அறியாமையே
உன்னை தேட ஆரம்பிச்சிடுவேன்

வழி தெரியாத ஒரு குழந்தையை
விரல் பிடிச்சுட்டே போயி
நெரிசல் ல விட்டுட்டுப்போனா
அது சுற்றும் முற்றும் பார்த்து
கண்கள் மிரண்டு
அங்கும் இங்கும் தேடி அழுமே
அப்படி அழும்
உன்னைக்காணாமே
என் அரைக்கால் சட்டை மனம் ம்ம்

தற்சமயம் ஒரு கோமாளி கோலம் போட
தனியறை வேணும்
எதுவுமே நிகழவில்லை
என்கிற
சிரிக்கும் முகமூடிக்குப்பின்னால்
உன் நினைவுகள் நின்று
கேலி செய்து சிரித்துக்கொள்ளட்டும்

சிலபோது நீ,
நான் காமத்தோடு மட்டுந்தான்
உன்கிட்ட அணுகுவதா சொல்லுவா
என்னோட மட்டுமில்ல
யாரோட கட்டுப்பாடுக்குள்ளயும் இருக்கக்கூடாது
உன்னை நீயா வச்சு மட்டுமே
ரசிச்சிக்கிட்டிருந்தேன்
நீ எதுவும் கேக்கலேன்னாலும்
உனக்காகன்னு செய்ய
கோடி கனவுகளோடு இருந்தேன்
கணமே போனா தேடுவேன்
நீ அழகு, அழகில்லை, அறிவு, அறிவா இல்லை
என்கிற
கணிப்புகள கடந்து
தோல் மஜ்ஜை எலும்பு நரம்பு ரத்தநாளம்
எல்லாம் தாண்டியிருக்கிற
உன்னோட மனசுங்கிற இருட்டறையைப் பார்த்தேன்
ஆமா அதுக்குள்ள
சில நேரம் நான் இருப்பதை தெரிஞ்சுகிட்டேன்
அதைச்சுற்றி உணர்வுகள் மூட்டி
உயிர்விதை செய்து
புன்னகைத்தூவி
உன் கோபத்துக்கிட்ட
அதை சொல்லாமே தள்ளி இருந்தேன்
அதுவும் நல்லாவே வளர்ந்துக்கிட்டு வந்தது
அந்த செடியின் தண்டுகள்
நெளிய தொடங்கின
முதல் பூத்த இலையில்
என் ரேகைகள்
இரண்டாம் பூத்த இலையில் என் கண்கள்
முதல் பூத்த பூவில்
நீ நான் சேர்ந்தது போல ஒரு குழந்தையின் சிரிப்பு
இப்படியே வளர்ந்து வர வர
சிலபோது
குரலுடைய தாலாட்டு உடைய
இருட்டறையில்
வெளிச்சமாய் உருவித்து
இதமுடன் பிரசவித்து
அழகுடன் பூப்பூக்கச்செய்த அந்த உணர்வுப்பூ
வாழ இனி ஏதும் இல்லை
என்ற புயலால்
மரணப்படு்கையில் மெல்லத்துவழும்,,
கல்லறைவாடை
நறும்பும் பூக்கள் கூட்டம்
இனி உயிர்ப்பித்தெழுந்தாலும்
அது அங்கேதான்,,
பிறந்து மறுபடி இறந்தாலும்
அது அங்கே மட்டுந்தான்,,,
துடிக்கின்ற உணர்விற்கு வார்த்தைகள் கிடையாது
இதயக்கருவறையில் உருவாகி
கருக்கலைத்த
காதல் ஒன்று
காற்று தீரி நிசப்தம் அமிழ்த்தும் தருவாய்
தன்னைக் காப்பாற்ற
ஒருவரும் இல்லை என்று
வாய்ப்பொத்தி விசும்பும் ஓலம் ஒன்று
மீயொலி எழுப்பும்,,
உயிர்ப்போகும் ,,,

"கல்லறைப்பூக்கள்"

எழுதியவர் : அனுசரன் (21-Nov-17, 3:11 am)
Tanglish : loosu mm
பார்வை : 354

மேலே