காதல் போயின்

வா என்கிறேன் - நீ
வருவதேயில்லை
தா என்கிறேன் - இதயத்தை
தருவதேயில்லை.

காண் என்கிறேன் - நீ
என்னை காண்பதேயில்லை
சொல் என்கிறேன் - நீ
காதலைச் சொல்வதேயில்லை.

கேள் என்கிறேன் - நீ
செவி சாய்ப்பதேயில்லை.
கொள் என்கிறேன் - நீ
இதயத்தை பெறுவதில்லை.

சேர் என்கிறேன் - நீ
என்னைச் சேர்வதேயில்லை.
தீர் என்கிறேன் - நீ
என் வேதனைகளை தீர்ப்பதேயில்லை.

ஏன்? என்கிறேன் - நீ
என்ன? என்கின்றாய்.
காதல் என்கின்றேன் - நீ
சாதல் என்கின்றாய்.

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (21-Nov-17, 12:18 am)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 83

மேலே