நாதி அற்று ஆக்கும் சாதியை நீ நீக்கும்

சமூக சுமூகத்தின் தூக்கு மேடை
சமம்மற்ற நிலத்தினிலே மழை நீரின் பாதை
நல்மண்ணை மலடாக்கும் நச்சு வேதி
நரிகளின் கூடாரம் அதுவே சாதி

நல்லாட்சி இல் ஆட்சி
கொன்றாட்சி செய்து விடும்
மனசாட்சி பெரும் வீழ்ச்சி
இதனாலே அடைந்து விடும்

காதலரின் பெருமெதிரி
காரியவான் பங்காளி
காகிதத்தில் இரு எழுத்து
காவுகளின் தலையெழுத்து

உதிரத்துள் ஒன்றிவிட்டு
சரீரத்தை சாய்த்துவிடும்
நோய் என்று அறியும் முன்னே
அணுவெல்லாம் பரவிவிடும்

சாதி அது வேண்டாம் இதை
சாதி அது போதும்
நாதி அற்று ஆக்கும்
சாதியை நீ நீக்கும்

ஒன்றே குலம்
அதுவே பலம்
வாழட்டும் நாடு அதை
வாழ்த்தி நீ பாடு

எழுதியவர் : கவியரசன் (31-Jan-15, 1:54 pm)
பார்வை : 63

மேலே