ஆறிலொன் றன்றோ புரவலர் கொள்ளும் பொருள் - முத்தொள்ளாயிரம் 37

நேரிசை வெண்பா

என்னெஞ்சு நாணு நலனும் இவையெல்லாம்
மன்னன் புனனாடன் வௌவினான் – என்னே
அரவகல் அல்குலாய் ஆறிலொன் றன்றோ
புரவலர் கொள்ளும் பொருள்! 37

பொருளுரை:

என்னுடைய எண்ணம், நாணம், நலம் ஆகிய இவை எல்லாவற்றையும் காவிரி பாயும் புனல் நாட்டை ஆளும் சோழன் பிடுங்கிக் கொண்டான். பாம்புப்படம் போல விரிந்திருக்கும் அல்குல் கொண்ட என் தோழியே! வருவாயில் ஆறில் ஒரு பங்கைத்தானே காப்பாற்றும் மன்னவன் வரியாக வாங்கிக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் பிடுங்கிக் கொள்ளலாமா?

எழுதியவர் : பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை (12-Sep-25, 3:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

சிறந்த கட்டுரைகள்

மேலே