பெண்ணே
பெண்ணே !
பிரம்மன் படைத்த
உயிர் பொற் சித்தரம்
நீயடி
உன்னை யாரும்
கலங்கடிக்கவும் கூடாது
உன் அழகும் யாரையும்
கலங்க வைக்கவும் கூடாது
உன் அதீத அழகை
திரை போட்டு மட்டும்
திரைச் சீலை போல
ஆடைகள் அணிந்து காட்டதே
காமுகன்கள் காத்திருக்கிறார்கள்
உன் கற்பை சூரையாட -நாய்கள்
போல மோப்பம் பிடிப்பவர்களுக்கு
வாய்ப்பாக உன் ஆடை அலங்காரம்
இருக்கவேண்டாம்
தமிழ் நாட்டு பண்பாடு-உனக்கு
இருக்கட்டும் -நீ
ஆபத்தில் இருந்தாலும் -உன்
தமிழ் பண்பாடு காப்பற்றும் -நீ
அந்நிய தேசத்தில் இருந்தாலும்
உன் கட்டழகு-நம்
நாட்டை கதற வைக்க வேண்டாம்
சிறிதளவேனும் பலாத்கார செயலை
குறைக்க உன் உடை அவசியமாகட்டும்
உன்னைப பார்த்து ஏளனம்
செய்யா சமுகத்தை உருவாக்கு -ஆனால்
உன் எழுச்சிக்காய் ஒரு சமுகத்தை
உருவாக்காதே
வெப்பமோ குளிரோ -உன்
உடை பிறரை கவர்ந்திழுக்கும்
வண்ணம் வேண்டாமடி
நாய்களும் நளினம் செய்யும்
காலமாக மாறுகிறதே -உன்
கைக் குட்டை அளவு ஆடைகள் கண்டு
உனக்கும் பின் நல்லதோர்
தலை முறை உருவாக -நீ
முன் மாதிரியாக இருந்து விடு
கலாச்சார மாற்றம் இதுவென
சாக்குபோக்கு சொல்லாதே -இது
உன் அழகை மற்றவர்களுக்கு
முன் கூட்டும் -ஒரு
செயலாக இருக்கின்றது
பெண்ணே
நீ மதிப்பிற்குரிய
பூமி தேவதை
நீ உலகத்தை ஆளுவதே தவிர
அழிப்பதாய் இருந்து விடாதே
நன்றி
சத்யா ..மேடம்