நாகூர் ஹனிபா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நாகூர் ஹனிபா |
இடம் | : ஓட்டமாவடி இலங்கை |
பிறந்த தேதி | : 16-Aug-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 201 |
புள்ளி | : 30 |
முந்தாணைகள் தீப்பற்றும்
நிர்வாணப் பூக்கள் மலரும்
மருமங்களில் புழு ஊறும்
ஊமைச்சித்திரம் சிதையும்
நிலவின் சேலை அவிழும்
கர்ப்பப்பைக் கூடு அலறும்
பிள்ளை பசியால் அழுவும்
அன்னை இரவால் அகவும்
இதயம் குருட்டு பொம்மை
மானம் ரூபாவின் அடிமை
குறை மாதக் கர்ப்பிணியாய்
பிறை போன்ற இரு வீக்கம்
நிறை குடத்து ரோஜாக்காடு
மீசை முள்ளில் ஆமை ஓடு
கன்னி மங்கை கடத்தி வந்து
ஓநாய்கள் நடுவே அறுவடை
நூறு சிங்கம் மென்று துப்பிய
மானைப் போன்று அவ கதை
ஒரு பட்டாம் பூச்சி பிடிப்பாள்
அது கூட பால் அங்கம் கடிக்க
சோகக் கவிதைகள் படிப்பாள்
மாதாவிடாய் தூக்குப் போடும்
உள்ளாடை அவ விஷ மருந்து
ப
நீயும் நானும் இதயங்கள்
மழைத்துளிகள் மேலே
இரு ரயில்கள் ஓடுகிறது
நீயும் நானும் கனாக்கள்
இமையின் ஓரம் நீர்த்துளி
தும்பி போல் பறக்கிறது
நீயும் நானும் புத்தகங்கள்
பூக்களின் உஷ்ணம் பட்டு
மூச்சுக் காற்று எரிகிறது
நீயும் நானும் சித்திரங்கள்
உதடுகளை பறி கொடுத்து
புல்லாங்குழல் அழுகிறது
நீயும் நானும் ஜன்னல்கள்
மண்ணெண்ணை போல
நிலவும் எட்டிப்பார்க்கிறது
நீயும் நானும் குளிர் மலை
தேனீர் அறுந்தும் முன்பே
இரவுக் கடை கரைகின்றது
நீயும் நானும் மெளனங்கள்
சில வண்ணத்துப் பூச்சிகள்
இனி தீக்குளிக்கக் கூடும்
நீயும் நானும் குழந்தைகள்
பல மின்மினிப் பூச்சிகள்
இனி சோறூட்டக் கூட
இங்கிலாந்து நதிகள் ஒன்றாகி
இந்தியன் இந்தியன் என்கிறது
துப்பாக்கிக் குண்டுகள் பூவாகி
காந்தியின் ஈ.பி.கோ கற்கிறது
பூக் கடை சாக் கடை தீட் டென
ஜாதிச்சண்டைகள் ஏன் நண்பா
புல் வெளி நெல்மணி பட்டென
அஹிம்சைக்குள் நீ வா நண்பா
இரத்தங்கள் சிந்திய தேகங்கள்
சட்டைகள் மாற்றிய காகங்கள்
மேனி மூடா உன் கலப்பைகள்
அன்று நம் தோழியை கொன்ற
அந்நியன் நீ வென்றாய்; இன்று
பாரதம் மாறிப் போனது காந்தி
கரசக் காட்டு கள்ளிப் பாலூரில்
இந்தியனாய் நீ பிறந்து வந்திடு
உள்ளதை உள்ள படி சொல்கிறேன்.
என்னை தாலாட்டும் அவளது உதடுகளை காணவில்லை. கறுப்புத் துணியால் கண்களைக் கட்டி நானும் அவளும் விளையாடும் போது அவளது கண்களை தோண்டி விட்டார்கள். இமைகளை களவாடி கல்லறைப் பூச்சிகளுக்கு சட்டை தைத்தார்கள். ஆடைகளுக்கு விடுமுறை கொடுத்து விட்டு அங்கங்களை ஆயுதங்களால் குத்திக் கிழித்தார்கள். திக்கித் திக்கி சுவாசக் காற்று அவளது நாசிக்குள் மீதமுள்ள போது வாளினால் குத்தி இதயத்தை கையில் எடுத்து சக்கை போல் பிழிந்தார்கள். மாலை மங்கும் வானம் நான் உன்னிடம் தாய்ப் பால் இரவல் வாங்கும் நேரம். இப்போது என் உதடுகள் கண்களானது; என் கண்கள் உதடுகளானது. தோட்டாக்கள் ஈக்கள் போல் அவளை மூடியது. நய
கண்களால் உலகை அளந்தவன்
கண்ணீரால் பூக்களில் சிரிக்கிறான்
மண்ணின் மடியில் தவழ்ந்தவன்
மண்ணுக்குள் தூக்கம் கொள்கிறான்
வானத்தின் நிலவை பார்த்தவன்
வானத்தின் பருக்களை எண்ணினான்
கானத்தின் மெட்டை கேட்டவன்
கானகத்தின் சோகத்தை எழுதினான்
கருப்பை முட்டைக்குள் நீந்தியவன்
கருவறை தமிழனென நினைத்தான்
இருளின் மின்மினிகளை பிடித்தவன்
இருளின் மண்புழுவோடு பேசுகிறான்
நதியில் விழுகின்ற மேகத் துளிகள்
நதி வெள்ளம் பாட உனை அழைத்தது
சதியை எழுதுகின்ற இறைவனவன்
மதி மேடையில் மரணம் வைத்தான்
மானை கொன்ற குகைகள் கண்டேன்
பேனை கொண்ட தாகத்தை சொன்னேன்
சாலை எங்கும் குருவிகள் கண்டேன்
கலைக்கு ந
11.பாழடைந்த வீட்டின் பூட்டினை உடைத்து
கூரையை அலங்கரிக்கிறது சிலந்தி வலைகள்
12.வாழ்க்கை என்ற ஆகாயத்தில் நூல் அறுந்த
காற்றாடியாய் பறந்து செல்கிறது உள்ளம்
13.பார்வையிழந்தவன் வரைந்த ஓவியமும் முகவரியிழந்த
பாதையின் பிச்சைப் பாத்திரத்தில் விருதுகளை பெறுகிறது
14.உதிர்ந்த இலைகளின் முகப்பில் பூக்கள் தெரிந்தும்
குற்றவாளி சிறைக் கூண்டில் காற்றின் நாமங்கள்
15.தகுதியுடைவன் இட்ட கனவுகளின் அடித்தளத்தில்
தகுதியற்றவன் மாளிகை நிலையின்றி தள்ளாடுகிறது
16.கடலில் தொலைந்த முத்துக்களை தேடுகையில்
உரிமையிருந்தும் ஊமையாய் போனது நியாயங்கள்
17.தொட்டிலிட்ட சந்தியில் தாலாட்ட யாருமில்லை
கூட்டத்த
வா மழையே!வா மழையே!வா மழையே!
மேகத்தின் மோகம் கண்ணீரின் ஓலம்
மண் நிலமே! தாய் நிலமே! பூ நிலமே!
இரைப்பையின் தாகம் வித்தினுள் ஓசை
***
மார்கழி வந்தால் பசுமைக்கு கொண்டாட்டம்
கோடை சுட்டதால் உழவனுக்கு புண்காயம்
கதறும் குழந்தை மழலை நெஞ்சினில்....,
சிதறும் நெல்மணி அறுவடை உயிரினில்...,
***
விழி தூங்காமல் உயிரின் சுவாசத்தை
வேருக்குள் புகுத்தி நலம் கேட்பான்.
வழி தவறிய பருவத்தின் வானிலையில்
ஊருக்குள் அணைகட்டியும் வாழ்வை மூழ்கிடுவான்.
***
உலகத்தின் இரைப்பையில் தன் வியர்வையால்
விளைந்த செல்வத்தை அள்ளிப்போட்டு ஏப்பமாக்கினான்,
கடன் கழுத்தை நெறிக்க கண்களை அடகு
வைத்து கடன் போக்க கடவுள்
சிலந்திவலையில் உறங்கிட முடியாது.
எறும்புகள் கூட்டம் தன்னைக் காட்டிலும்
பன்மடங்கான பருக்கைகளை தோளில்
சுமந்து வாழிடம் கொண்டு செல்கிறது....,
***
உமிழும் எச்சை உமிழ்ந்தவன் என்றும்
எண்ணிப் பார்த்த சரித்திரங்கள் இங்கில்லை.
உடலின் வியர்வையை கூட நுகர்ந்து
மூக்கை பொத்திக் கொள்ளும் மானிடக்கூட்டம்
சாக்கடையில் இறங்கி வேலை செய்யும்
உடலை உயிராக என்றும் மதித்ததில்லை.
***
ஜாதகம் மேல் நம்பிக்கையை முடக்கி
பொன்னும் பொருளும் நிறைந்த செல்வன்
மனையாள் கருவில் ஆணுக்கு பதிலாக
பெண்ணாக வந்த விந்தின் உயிரை கள்ளிப்பாலில்
உறங்க வைக்கிறாள்.அதே வீட்டின் துணிகளை
சலவை செய்யும் ஏழை விட்டு பெண்மணி
காதல் அது இரு
மனதின் மோதல்
அழகான கண்கள்
அதில் என் விம்பம்
நிலவில் படிந்த கரைகள்
என்னை ஒரு போதும்
மறவாதே!!!
உன்னை நினைத்து
நான் இறக்கவும் தயார்
நீ உன் கருவில் சுமக்க
அனுமதி தந்தாள்.
காதல் வாழ்வில்
இருவரும் சேர்வோம்
ஒன்று காதலர்களாக...
இல்லை என்றால் ஆத்மாவாக....,
மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா ...
மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
கண்ணை விட்டு போனாலும்
கருத்தை விட்டு போகவில்லை
மண்ணை விட்டு போனாலும்
உன்னை விட்டு போகவில்லை
இன்னொருத்தி உடலெடுத்து
இருப்பவளும் நானல்லவா
கண்ணெடுத்து பாராமல்
கலங்குவதும் நீயல்லவா
மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
உன் மயக்கம் தீர்க்க வந்த
பெண் மயிலை புரியாதா
தன் மயக்கம் தீராமல்
தவிக்கின்றாள் தெரியாதா
என் உடலில் ஆசையென்றால்
என்னை நீ மறந்து விடு
என்னுயிரை மதித
ஆத்தி எனை நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன்
கோர புல்ல ஓர் நொடியில் வானவில்லா திரிச்சாயே
பாறை கல்ல ஒரு நொடியில் ஈர மண்ணா கொழைச்சாயே
ஊரு அழகி உலக அழகி யாருமில்ல உனைபோலே
வாடி நெருங்கி பாப்போம் பழகி
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே
உன்