நீயும் நானும் --- முஹம்மத் ஸர்பான்
![](https://eluthu.com/images/loading.gif)
நீயும் நானும் இதயங்கள்
மழைத்துளிகள் மேலே
இரு ரயில்கள் ஓடுகிறது
நீயும் நானும் கனாக்கள்
இமையின் ஓரம் நீர்த்துளி
தும்பி போல் பறக்கிறது
நீயும் நானும் புத்தகங்கள்
பூக்களின் உஷ்ணம் பட்டு
மூச்சுக் காற்று எரிகிறது
நீயும் நானும் சித்திரங்கள்
உதடுகளை பறி கொடுத்து
புல்லாங்குழல் அழுகிறது
நீயும் நானும் ஜன்னல்கள்
மண்ணெண்ணை போல
நிலவும் எட்டிப்பார்க்கிறது
நீயும் நானும் குளிர் மலை
தேனீர் அறுந்தும் முன்பே
இரவுக் கடை கரைகின்றது
நீயும் நானும் மெளனங்கள்
சில வண்ணத்துப் பூச்சிகள்
இனி தீக்குளிக்கக் கூடும்
நீயும் நானும் குழந்தைகள்
பல மின்மினிப் பூச்சிகள்
இனி சோறூட்டக் கூடும்
நீயும் நானும் கருவறைகள்
வானவில் கொண்டையில்
குறிஞ்சிப் பூ முளைக்கிறது
நீயும் நானும் இரத்தக்(கூடு)
இமையெனும் புறாக்களை
கூர் நகங்கள் பலியிடுகிறது
நீயும் நானும் ஓலைச்சுவடி
நரைத்துப் போன ஞாபகம்
புற்று நோயால் வாடுகிறது
நீயும் நானும் தண்டவாளம்
காதலித்த சவப்பெட்டிகளை
சுமந்து கொண்டு போகிறது
நீயும் நானும் சேராப்(பிறவி)
காதல் புழு சாப்பிட்ட எனை
கறுப்பு நாகம் கொத்துகிறது