என்னையே மறந்தேன்
அவன் கைகோர்த்து நடக்கையில்
அவன் தோல் சாய்ந்து சிரிக்கையில்
ஏன்
அவன் உடன் இருந்த பொழுதுகளில் எல்லாம்
என் உள்ளத்தில் காதலும் இல்லை
கள்ளமும் இல்லை
ஏனோ விடை பெற்று அவன் எட்டி போனதும்
மெதுவாய் எட்டி பார்க்கிறது
என் காதலும் இளமையும் !
முன்பே நினைவூட்டி இருந்தால் என் காதலை
சொல்லியிருப்பேனே என்று கடிந்து கொண்டேன்
என் இளமையை
இளமையோ
என்னை மட்டுமா மறந்தாய்
உன்னையும் மறந்து விட்டாய்
அவன் கள்ளமில்லா புன்னகையில் என்று
என்னையே குறை கூற
இன்றும் காத்துக்கொண்டிருக்கிறேன்
அடுத்த சந்திப்பிற்காக.........