ஒரு சிகப்பு பல்பில் நூறு காமக் கடை --- முஹம்மத் ஸர்பான்

முந்தாணைகள் தீப்பற்றும்
நிர்வாணப் பூக்கள் மலரும்
மருமங்களில் புழு ஊறும்
ஊமைச்சித்திரம் சிதையும்
நிலவின் சேலை அவிழும்
கர்ப்பப்பைக் கூடு அலறும்
பிள்ளை பசியால் அழுவும்
அன்னை இரவால் அகவும்
இதயம் குருட்டு பொம்மை
மானம் ரூபாவின் அடிமை
குறை மாதக் கர்ப்பிணியாய்
பிறை போன்ற இரு வீக்கம்
நிறை குடத்து ரோஜாக்காடு
மீசை முள்ளில் ஆமை ஓடு
கன்னி மங்கை கடத்தி வந்து
ஓநாய்கள் நடுவே அறுவடை
நூறு சிங்கம் மென்று துப்பிய
மானைப் போன்று அவ கதை
ஒரு பட்டாம் பூச்சி பிடிப்பாள்
அது கூட பால் அங்கம் கடிக்க
சோகக் கவிதைகள் படிப்பாள்
மாதாவிடாய் தூக்குப் போடும்
உள்ளாடை அவ விஷ மருந்து
பள்ளி மாணவன் கலைவான்
மேலாடை நீங்கி விலை மகள்
சிகரெட் நெருப்பில் சிரிப்பாள்
ஊர் பெற்ற அவள் பிள்ளைக்கு
தொட்டில் கட்டி தூளி பாடுவாள்
விலை மகனும் அம்மா தானே
பிள்ளை சிரிக்க அவ அழுவாள்
பிச்சைக் காரன் கூட வருவான்
என் தாய்ப்பாலை திருடுவான்
மோகம் வெறி பிடித்த நாய்கள்
கூந்தல் மேல் சிறுநீர் கழிக்கும்
பழைய காதலன் கண்ட போது
வெட்கப்பட்டு நகம் கடிப்பாள்
விதியின் நிலையை நினைத்து
பழைய டயரி தேடிப் போவாள்
சிகப்பு பல்பு வெள்ள அறையில்
மீள முயன்றும் காயப்படுவாள்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (15-Jun-18, 4:58 pm)
பார்வை : 179

மேலே