உருப்படுமென்று

தொந்தரவு செய்த
தன் ஆறு வயது பையனிடம்
துண்டுகளாக வெட்டிய
உலகப்படமொன்றை தந்து
ஒன்றிணைக்க சொன்னார்

ஒரு மணி நேரத்தில்
சரியாக இணைத்து கொடுத்த
சிறு பிள்ளையைக் கண்டு
பெருமிதம் கொண்ட தந்தை
எப்படி செய்தாய் என்றார்?

உலகப்படத்தின்
மறுபக்கத்தில் இருந்த
மனிதப்படத்தை சேர்த்தேன்
உலகப்படம் தானாக
முழுமையானது என்றான்

ஆச்சரியமடைந்த தந்தை
அகமகிழ்ந்தார்,
ஒன்று புரிகிறது—மனிதன்
முதலில் சீர்பட்டால்
உலகம் உருப்படுமென்று.

எழுதியவர் : கோ. கணபதி. (15-Jun-18, 9:52 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 33

மேலே