இது நாத்திகமாகவும் இருக்கலாம்

கண்களுக்கு அகப்படாது
அந்த துகள்கள்...
பார்தவர்களும் யாருமில்லை
உணர்ந்தவர்கள்
அவர்களுக்கே வெளிச்சம்...
நோன்பு துறந்து
மதம் காணாமல்
மனிதத்திற்காக இரத்ததானம்
செய்தவரின்
குல்லா நூலிலையில்
தென்படலாம்...
ஒடுக்கப்பட்டவர்
முன்னேற்றித்திற்காக
ஓய்வில்லாமல் உழைப்பவர்தம்
சிலுவையின் சிதைந்த
மரச்சீவின் இடுக்கில்
கிடைக்கலாம்....
எங்கோ சிரியத்தின் போரில்
மரித்த குழந்தைக்காக
கண்ணீர் வடித்தவரின்
விபூதியின் ஒற்றை துகளை
பிடிக்க நேர்ந்தால் அதில்
அகப்படக்கூடும்...
பிசைந்து வைத்த
எச்சில் சோற்றை
தின்றுவிட்டு அன்போடு
முகம் பார்க்கும்
நாயின் கண்களில் கூட
புலப்படலாம்...
உருவத்தில் தேடமால்
தூய்மையான உள்ளத்தால்
தேடினால்
அந்த கடவுள் துகள்களை!

எழுதியவர் : சுரேஷ் குமார் (14-Jun-18, 11:51 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 180
மேலே