தீராது மயக்கம்

கண்ணே வாடா கண்மணி வாடா
பொன்னே வாடா பூமுத்தே வாடா
பொக்கை வாயை நீ விரித்தால் சிரித்தால்
பொங்கும் கவலை மறைந்தே போகுதே
ஆரத் தழுவி அணைக்கும் போதெல்லாம்
தீராச்சுவை நெஞ்சில் தெவிட்டா இன்பமடா

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (14-Jun-18, 3:15 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 1117
மேலே