பெ கோகுலபாலன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பெ கோகுலபாலன்
இடம்:  நங்கநல்லூர், சென்னை
பிறந்த தேதி :  08-Apr-1960
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Sep-2014
பார்த்தவர்கள்:  690
புள்ளி:  229

என்னைப் பற்றி...

நான் ஒரு கட்டிட பொறியாளர். சென்னை மாநகராட்சியில் நில அளவர் மற்றும் கட்டிட ஆலோசனை பொறியாளர் ஆக பணி. மாணவபருவத்தில் தமிழ் மீது மிகுந்த ஆர்வம் சிறு சிறு கவிதைள் எழுதியதோடு சரி. இலக்கியம், இலக்கணம் எல்லாம் அவ்வளவாக தெரியாது. கவிதைகளாக மனதில் தோன்றுவதை எழுதுவேன் மக்கள் ஒத்துக்கொண்டால் அது அவர்களுக்கு கவிதை இல்லையென்றால் அது எனக்கு மட்டும் சொந்தம். வேலை பளு காரணமாக தொடர இயலவில்லை. ஆனால் தமிழ் எழுத்துக்கள் என் உள்ளத்தில் புதைந்து வித்துக்களாக இருந்தது தற்போது மீண்டும் அதை உரம் கொடுத்து பதியம் செய்து வருகிறேன். "கட்டுங்கள் கனவு இல்லத்தை" என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளேன். கருத்துக்களை வரவேற்கிறேன் அலைபேசி எண்: 9444079620 மின்னஞ்சல்: dineshgokulabalan@gmail.com

என் படைப்புகள்
பெ கோகுலபாலன் செய்திகள்
பெ கோகுலபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2015 9:14 am

விண்ணைநோக்கி நீச்சலடித்து
எங்கள் மனதை
கொள்ளை கொண்ட
மன்னாதி மன்னவனே.....!

நீ குப்பறத்து
மண்ணை காண துடிக்கின்றாய்
நாங்களோ உன்னை
காண துடிக்கின்றோம்.....!

உன் கை கால்களின்
அசைவுகளெல்லாம் எங்களுக்கு
ஒரே மாதிரியாகதான்
புலப்படுகிறது ஆனால்
ஒவ்வொரு அசைவிற்கும்
வெவ்வேறு அர்த்தமுண்டோ.....!

உன் பற்களற்ற
சிரிப்பை கண்டு
நாங்கள் சொற்களற்று
திகைக்கின்றோம்.....!

உன் நாடி துடிப்பின்
சத்தத்தை உணர
எங்கள் மடிகள் இரண்டும்
வாடிக்கிடக்கின்றன.....!

என் நெஞ்சில் முளைத்த
கேசங்களேல்லாம் ஏங்குகின்றன
நீ எப்போது சிறுநீர் கழித்து
செம்மையாக்குவாய் என.....!

எங்கள் வீட்டின் தரைகளெல்ல

மேலும்

ஏக்கத்தின் மலர்ந்த கவிகனி 23-Aug-2015 11:51 am
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) kaviyamudhan மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Jul-2015 5:09 pm

சாதிக்கா பிறந்தேன் நான்
இல்லையே
சாதிக்க பிறந்தேன்
வாய் திறந்து சூளுரைக்க
சுருண்டு விழுந்தேன் மண்ணில் .

தந்தையின்
இரும்புக் கரங்கள் இடியாய்
பதம் பார்த்தது கன்னத்தை .

சாதி தான் நமக்கு சாமி
தெரிந்துகொள்
பக்க வாத்தியம் வாசித்தால்
சாத்தானிடமே சாதிபார்க்கும்
அப்பன பெத்த ஆத்தா .

அப்பா சொன்னா கேளும்மா
அடி வாங்கி சாகாத
அம்மா மனசு தாங்குது இல்ல
முந்தானை தலைப்பால்
மூக்கை துடைத்துக்கொண்டாள்
அம்மா.

தினமும் திட்டுபட்டும் திருந்த மாட்டாயா நீ .
பயம்கலந்த பாசத்தோடு
அக்கா .

முயலாதே தங்கையே
முடங்கி போவாய் .
சாதியால் காதலை
சாதலுக்கு
அள்ளிக்கொடுத்த
அண்ணன் .

மேலும்

வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி கயல்.. 26-Aug-2015 10:12 am
நன்றி நன்றிகள் அண்ணா 25-Aug-2015 11:21 am
நன்றி நன்றிகள் தோழி 25-Aug-2015 11:19 am
அச்சோ நட்பே வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் இல்லை . தங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் . 25-Aug-2015 11:18 am
பெ கோகுலபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2015 2:21 pm

கடல் சூழ்ந்த நிலத்தின் நடுவில்
பிறந்த பெருங்கடலே.....!

மாணவர்கள் தோட்டத்தில்
மணம் வீசிய மணிமகுடமே.....!

மண்ணில் பல சோதனைகளை எதிர்த்து
விண்ணில் பல சாதனைகள் செய்த
விடிவெள்ளியே......!

விண்ணிற்கு ஏவுகணை ஏவிய நீர்
இன்று மண்ணில் சோகக்கனை
ஒன்றை ஏவி சென்றிரே.......!

அக்னிசிறகுகள் படைத்த நீர்
இன்று எங்கள் மனம்
அக்னி குழம்பானதே......!

அணு சக்தியை நாட்டிற்கு தந்தீரே
இன்று உங்களை இழந்து துடிக்கும்
மாணவ உள்ளங்களுக்கு
என்ன சக்தி தருவீர்.......!

மாணவர்களே கனவு
காணுங்கள் என்றிரே
இன்று அவர்கள் கண்களை
குளமாக்கி சென்றிரே......!

மண்ணில் அணுவை
வெடிக்க செய்த நீர்
இன்று எங்

மேலும்

பெ கோகுலபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2015 9:56 pm

யானை வழித்தடத்தை மறித்து
குடில் கட்டிய கும்பல்
கூச்சலிடுகிறது
யானை ஊருக்குள் புகுந்ததென……!

துந்து, தொலைந்துபோன
ஏரி குளங்களின் நீர்
போத்தல்களில் அடைக்கப்பட்டது
மழைநீர் சேகரிப்பு மாநாட்டில்
மேடை பேச்சாளர்களுக்காக……!

காடுகளையும் மரங்களையும்
அறுத்த ரம்பம்
பசிதீரலை என
உடற்கூறு ஆய்வுக்காக
சவகிடங்கிற்கு சென்றது
பிணத்தை அறுக்க.…..!

நதிக்கு பெண்ணின் பெயர் வைத்ததால்
அவளுக்கு ஒப்பனை செய்ய
சாயபட்டறை வண்ண கழிவுகளை
வாரி இறைத்து அழகு பார்க்கின்றான்……!

ஓசோனுக்கு ஓட்டை போடுவதில்
நம்மவன் தீவிரம் காட்டுகிறான்......!
இவ்வுலகை படைத்த பிரம்மன்
எட்டி பார்த்து முகம் சுழித்து
இன்னொரு உலக

மேலும்

பெ கோகுலபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2015 5:01 pm

கரு இரவில் காதல் பெருகிட
கண் அசைவில் உருவான கருவே…….!
ஒரு துளியில் புதைந்த
ஓர் அணு……..!
ஒரு லட்சம் நரம்பாய்
மெருகோடி மெய் தரித்து…….!
பனிக்குடத்தில் மிதந்த
பரம்பொருளின் அதிசியமே…….!

கருவறையில் நீ உருவெடுத்தாய்
கசப்பெனும் வாய்சுவையை
உன் அன்னைக்கு அளித்தாய்…….!
குமட்டலாய்…….!
நெருடலாய்…….!
அவஸ்தையாய்…….!

குறைந்தது அவள் தேகம்
குவிந்தன வாழ்த்துக்கள்…….!
நா சுவைக்கு புளிப்பாய்
நல் மாங்கனி கேட்பாள்……..!
திரைமறைவில் திருடித்தின்பாள்
மெய் கெடும் ஊறுகாயை.......!
கேட்டால், நீ கேட்டாய் என்பாள்…….!

மயக்கத்தால் தள்ளாடுவாள்
மனச்சோர்வென்று உறங்கிடுவாள்……!
மாதங்கள் சில கழிந்து
மட

மேலும்

வாழ்த்துக்கள் கோகுலபாலன் சார் ! பேரன் வந்த வரவிலேயே ஒரு அருமையான கவிதையையும் தாத்தாவின் மனதிலே கொண்டு வந்திருக்கிறான் ! வாழ்த்துக்கள் ! 04-May-2015 7:41 pm
வாழ்த்துக்கள் தோழமையே 04-May-2015 3:01 pm
வாழ்த்துக்கள் 26-Apr-2015 10:17 pm
அண்ணே. ... வாழ்த்துக்கள் ...வாழ்த்துக்கள் . தாத்தாவாகி விட்டீர் ..இனி பேரனின் பெருமைகள் கவியாகி சிலிர்க்கும் .... 26-Apr-2015 8:12 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Apr-2015 1:29 pm

உனது விழிகளின் வீணையில்
இமைகள் இசை மீட்டுகிறது...

உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம்
என்னை விட காகிதமே
அதிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறது...

பூக்களைப் போல நீ இல்லை
எல்லா பூக்களும்
உன்னைப் போலவே இருக்கின்றன...

மௌனம் கூட அழகாகிறது
நீ உறங்கும் பொழுது...

உன் இதழ் தொட்டதும்
வெட்கத்தில் சிவந்து
ஒரு மடங்கு சிவப்பு அதிகமானது
உதட்டுச் சாயத்திற்கு...

இதுவரை இசையென்று இருந்ததெல்லாம்
இல்லாமல் போகிறது
உன் கொலுசு சத்தத்தில்...

நீ
வெளியில் வராதே
வெயில் வேடிக்கைப் பார்க்கிறது...

உன் பாத சுவடுகளை
அழிக்க மனமில்லாமல்
அலைபாய்கிறது அலைகள் கூட...

நீ
கண்காட்சிக்கு செல்லும்ப

மேலும்

தம்பி என்று உரிமையாய் சொல்லுங்கள் 02-Oct-2015 6:39 am
மிக்க நன்றி தோழரே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழரே.. அகராதி எல்லாம் இல்லை நண்பரே... ஏதோ என்னால் முடிந்ததை எழுதுகிறேன்... ஆனாலும் என்னை விட இங்கு பலர் மிக அருமையாக எழுதி கொண்டிருக்கிறார்கள்... அவர்களையும் படித்து பாருங்கள்... 01-Oct-2015 11:31 pm
ஹா ஹா... அப்படியெல்லாம் இல்லை நண்பரே... என்னை விட மிக அழகாக எழுதும் வல்லமை இந்த எழுத்து தள கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள்... நான் ஏதோ கிறுக்கி கொண்டிருக்கிறேன்... அவ்வளவுதான்... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி... 01-Oct-2015 11:29 pm
காதல் அகராதியோ நீங்கள் 30-Sep-2015 5:16 pm
ஜின்னா அளித்த படைப்பை (public) முனோபர் உசேன் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
11-Apr-2015 1:29 pm

உனது விழிகளின் வீணையில்
இமைகள் இசை மீட்டுகிறது...

உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம்
என்னை விட காகிதமே
அதிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறது...

பூக்களைப் போல நீ இல்லை
எல்லா பூக்களும்
உன்னைப் போலவே இருக்கின்றன...

மௌனம் கூட அழகாகிறது
நீ உறங்கும் பொழுது...

உன் இதழ் தொட்டதும்
வெட்கத்தில் சிவந்து
ஒரு மடங்கு சிவப்பு அதிகமானது
உதட்டுச் சாயத்திற்கு...

இதுவரை இசையென்று இருந்ததெல்லாம்
இல்லாமல் போகிறது
உன் கொலுசு சத்தத்தில்...

நீ
வெளியில் வராதே
வெயில் வேடிக்கைப் பார்க்கிறது...

உன் பாத சுவடுகளை
அழிக்க மனமில்லாமல்
அலைபாய்கிறது அலைகள் கூட...

நீ
கண்காட்சிக்கு செல்லும்ப

மேலும்

தம்பி என்று உரிமையாய் சொல்லுங்கள் 02-Oct-2015 6:39 am
மிக்க நன்றி தோழரே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழரே.. அகராதி எல்லாம் இல்லை நண்பரே... ஏதோ என்னால் முடிந்ததை எழுதுகிறேன்... ஆனாலும் என்னை விட இங்கு பலர் மிக அருமையாக எழுதி கொண்டிருக்கிறார்கள்... அவர்களையும் படித்து பாருங்கள்... 01-Oct-2015 11:31 pm
ஹா ஹா... அப்படியெல்லாம் இல்லை நண்பரே... என்னை விட மிக அழகாக எழுதும் வல்லமை இந்த எழுத்து தள கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள்... நான் ஏதோ கிறுக்கி கொண்டிருக்கிறேன்... அவ்வளவுதான்... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி... 01-Oct-2015 11:29 pm
காதல் அகராதியோ நீங்கள் 30-Sep-2015 5:16 pm
காதலாரா அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Apr-2015 4:29 pm

கற்பனை மிதக்கும் கடைவிழி .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கிழக்குப் பார்த்து சிரிக்கையில
மேற்கும் மெதுவாய் முறைக்குதடி ..

வானம் பார்த்து ரசிக்கையில
பூமி பிளந்து விழுங்குதடி ...!

விழிகள் விரும்பிய எழில் நிறமும்
எரியும் தீயில் கருகுதடி ..

உணர்வை ஒதுக்கிய உயர் உறவு
செயலின் முடிவில் வாழுதடி ..

சித்திரை மாத அனல் சிதறல்
உடைந்த மனதை ஒட்டுதடி..

கனவை விரட்டும் விரலின் தாகம்
விண்மீன் மடியில் துள்ளுதடி ...

வார்த்தை கடத்திய காற்றுக்குள்
வர்ணனை மிகையாய் பொழியுதடி ...

சுடிதார் உடுத்திய கவிதைக்குள்
உணர்வை ரசிப்பது காதலடி ...

நகங்கள் கீறிய மேசைகளும்
நடன கலையில் ச

மேலும்

ஒரு ஆழகான பாடல் கேட்ட தாக்கம்..... அருமை அண்ணா!! 22-Apr-2015 7:53 pm
வரவில் மகிழ்ச்சி நண்பரே 20-Apr-2015 3:23 pm
வரவில் மகிழ்ச்சி தங்கச்சி.. 20-Apr-2015 3:23 pm
வரவில் மகிழ்ச்சி அண்ணா .. 20-Apr-2015 3:22 pm
காதலாரா அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Apr-2015 8:19 pm

மெளவுன தாக மடிப்புகள்
~~~~~~~~~~~~~~~~~~

உறங்கிய ஊமத்தப்பூவின்
உயிரை உள்ளிழுத்து ஊதும்
பாறை மோதிய முகமொன்றில்
முத்த முத்திரைக் கசிகிறது ..

வருடிய வாய்நுனியில்
வற்றிய தேன்துளியென
நெற்றித் தழுவிய நிஜமாக
தேக நித்திரை அவிழ்கிறது ....

பருகிய பாதங்களில்
உருட்டிய மயக்கமென
இதழ் இறுகிய ஈரமாக
இரவின் தீண்டல் திரள்கிறது ..

விலகிய விரல்களில்
உதிரும் புதையலென
நாணம் நழுவிய நகமாக
மெளவுன தாகம் முளைக்கிறது...

ஊடுருவிய உடல்களில்
துயிலாத கர்வமென
புலன் புலம்பிய புதிராக
காதலின் வேகம் கலைகிறது ...

- தேன்மொழியன்

மேலும்

மிக அருமையான படைப்பு 04-May-2015 3:01 pm
தொடர் வருகையில் மகிழ்ச்சி அண்ணே . 25-Apr-2015 7:32 am
விலகிய விரல்களில் உதிரும் புதையலென நாணம் நழுவிய நகமாக மெளவுன தாகம் முளைக்கிறது... // சொல்லாடல் சுவை கூட்டுகிறது // 25-Apr-2015 1:02 am
ம்ம்ம் ..கொஞ்ச நாளாய் மாற்றி கொண்டேன் நட்பே .. வரவில் மகிழ்ச்சி .. 19-Apr-2015 4:51 pm
பெ கோகுலபாலன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2015 3:54 pm

எல்லாவற்றையும் இழந்து விட்டதாய் என்னும் போதெல்லாம்
எழுத்தின் பக்கம் வருகின்றேன் .

புனிதா அக்காவின் அன்பிற்காக ,
சந்தோஷ் அண்ணாவின் ஆறுதலுக்காக ,
ஜின்னா அண்ணாவின் வரிகளுக்காக,
பழனி ஐயாவின் வாழ்த்திற்காக ,
நித்யாவின் துணிவிற்காக ,
கார்த்திகாவின் பணிவிற்காக,
வித்யாவின் கனிவிற்க்காக ,
சரவணா அண்ணாவின் தமிழுக்காக ,இராஜ்குமார் அண்ணாவின் எழுத்திற்காக,
யாழ்மொழி /சகி /அனீஷ்ராஜ்/ஜெபகீர்தனா /ரினோஷா/ இவர்களின் நட்புட்காக ,
முரளி ஐயாவின் கதைக்காக,
மலர் ஐயாவின் நகைச்சுவைக்காக,
கிருஷ்ணதேவ்வின் ரசனைக்காக,
ராம் வசந்த் அண்ணாவின் பொறுமைகாக ,
சாந்தி அம்மாவின் அறிவுரைக்காக ,
சியாமளா அம்மா

மேலும்

நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:52 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:50 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:48 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:46 pm
கவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) பா கற்குவேல் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
18-Jan-2015 6:41 pm

(திருநங்கை பற்றிய கவிதை)

பூவினத்திற்கும்
வண்டினத்திற்கும்
இடையில்
இது எந்த பாலினம்?

இறைவன் செய்த
மூனறாவது களிமண் பொம்மை
இது என்ன
தேவன் விளையாட்டு?

சமூகக் காடுகளில்
தடாகங்களே துரத்திய
இந்த தாக மான்
தன்னைத்தானே
சுய விசாரணை செய்கிறது

மூன்று கால நதிகளின்
சங்கமத்தில்
ஆண்டவனின் செல்ல குழந்தை
அலைகளை விம்முகிறது

வாழ்க்கை கச்சேரியில்
கேலிப் பார்வைகள்
வாசமிலா பூமனதில்
சோகப் போர்வைகள்

பாவம்
பருவராகம் பாடத் தெரியாத
பரிதாப வீணை
கண்ணீரை யல்லாமல்
வேறேது மீட்டும்?

அதன் சோக மீட்டலில்
பூமரத்தின் இலைச் சருகுகளாய்
ஊமை ஸ்வரங்கள
உடைந்து விழுகின்றன (1994)

( எமது "தர

மேலும்

எளிமையான அழகில் உணர்வுபூர்வமாக உண்மையை எழுதுவதே எம் முயற்சி . தங்கள் கருத்து ஊக்கம் தந்தது மிக்க நன்றி . பகிர்ந்தால் நன்று 02-Feb-2015 1:19 pm
"பிரம்மா நீ தவறு செய்யலாமா" என்ற தலைப்பில் நானும் புலம்பியிருந்தேன் சாலையில் பார்க்கையில் பரிதாபமாக இருக்கும் கவிதை அருமை உணர்வுப்பூர்வமான படைப்பு வாழ்த்துக்கள் 20-Jan-2015 6:50 am
இறைவனின் பிழையோ இயற்கையின் பிழையோ எது எப்படி இருப்பினும் அவர்களையும் நமது சக மனிதனாய் நினைக்காத மனிதனின் பிழையால்தான் மனம் வலிக்கிறது அவர்களை நினைத்து மூனறாவது = மூன்றாவது ? வாழ்த்துக்கள் தொடருங்கள் தோழரே.. 20-Jan-2015 4:54 am
பாவம் பருவராகம் பாடத் தெரியாத பரிதாப வீணை கண்ணீரை யல்லாமல் வேறேது மீட்டும்? அதன் சோக மீட்டலில் பூமரத்தின் இலைச் சருகுகளாய் ஊமை ஸ்வரங்கள உடைந்து விழுகின்றன // அற்புதம் தோழரே மறுபதிவு என்றலும் மனதை மயக்குகிறது // 19-Jan-2015 11:56 pm
பெ கோகுலபாலன் - பெ கோகுலபாலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2015 8:22 pm

கவிதைகளை காலச்சுவடுகளாக
தரணியில் தரும்
தர்மபுரி மாவட்டம்
ஈன்ற இராஜகுமாரனே......!

பார் புகழும்
படைப்புகளை காலம் பாராமல்
எழுத்து தளத்தில் எழுச்சியுடன்
எழுதி எங்களின் இதயங்களை
கவர்ந்த இளம் கவியே......!

விழிப்புணர்வு கவிதையாய்
- பிளாஸ்டிக் உணர்வுகள்
மனதை தொடும் கவிதையாய்
- மரண விளம்பரம்
அன்பின் அவசியத்தை உணர்த்தும்
- அதிகார உயிர்
காதல் கவிதையாய்
- உயிரை உடைக்கும் உணர்வாய்
இன்னும் பல........!
எழுத பக்கங்கள் இல்லை.......!
பாராட்ட வார்த்தைகள் இல்லை.......!

கெட்டுபட்டியில் பிறந்தாலும்
கெடாமல் நல் இளைஞனாக........!
கொட்டும் முரசுடன்........!
கோடை தென்றலாய்.........!
எஞ்சிய

மேலும்

நன்றி தோழரே 03-Feb-2015 7:29 am
நன்றி தோழரே 03-Feb-2015 7:29 am
நன்றி ராஜ்குமார் அவர்களே 03-Feb-2015 7:28 am
நல்ல வாழ்த்து கவிதை 02-Feb-2015 9:41 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல
பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (28)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (28)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
மேலே