கலாமை காலன் அழைத்தான்
கடல் சூழ்ந்த நிலத்தின் நடுவில்
பிறந்த பெருங்கடலே.....!
மாணவர்கள் தோட்டத்தில்
மணம் வீசிய மணிமகுடமே.....!
மண்ணில் பல சோதனைகளை எதிர்த்து
விண்ணில் பல சாதனைகள் செய்த
விடிவெள்ளியே......!
விண்ணிற்கு ஏவுகணை ஏவிய நீர்
இன்று மண்ணில் சோகக்கனை
ஒன்றை ஏவி சென்றிரே.......!
அக்னிசிறகுகள் படைத்த நீர்
இன்று எங்கள் மனம்
அக்னி குழம்பானதே......!
அணு சக்தியை நாட்டிற்கு தந்தீரே
இன்று உங்களை இழந்து துடிக்கும்
மாணவ உள்ளங்களுக்கு
என்ன சக்தி தருவீர்.......!
மாணவர்களே கனவு
காணுங்கள் என்றிரே
இன்று அவர்கள் கண்களை
குளமாக்கி சென்றிரே......!
மண்ணில் அணுவை
வெடிக்க செய்த நீர்
இன்று எங்கள் நெஞ்சத்தை
வெடிக்க செய்து
விண்ணிற்கு சென்றிரே.......!
சக்தியின் பிறப்பிடம் சாதனை
அது உங்கள் யுக்தியில்
இருந்தது செயலாக......!
நீர் மறைந்துவிட்டாய்......!
நீர் நாட்டிற்க்கு செய்த
சாதனைகள் மறையாது......!
நீர் மறைந்துவிட்டாய்......!
நீர் மாணவர்களுக்கு செய்த
போதனைகள் மறையாது.......!
நீர் மறைந்துவிட்டாய்.......!
நீர் இளைஞர்களுக்கு
காட்டிய வழிகள் மறையாது.......!
மலைநகர அரிமா சங்கம்
மலையென திகழ்ந்த
மாமனிதரின் மறைவிற்கு
கண்ணீர் அஞ்சலியாக
இந்த இரங்கல் பா......!
தலைவர். பெ. கோகுலபாலன்