பெ கோகுலபாலன்- கருத்துகள்

சாதி பிறந்த இடம் யாருக்கும் தெரியாது
ஆனால் மறைந்த இடம் தண்டவாளங்களுக்கு இடையில்
அருமை சகோதரி அருமை

கவிதைகள் எல்லாம்
காதல் செய்யாமல் காத்துக்கிடக்கின்றன
ஜின்னா கவிதை எழுதாதவரை
அருமை நண்பரே

சுடிதார் உடுத்திய கவிதைக்குள்
உணர்வை ரசிப்பது காதலடி ..

கோவை குளிர் தென்றலில் மிதந்து வந்த கவியோ
அருமை அருமை சூப்பர்

வார்த்தைகள் விளையாடுகின்றன
அருமை ராஜ் அருமை

வாழ்க்கையில் ஆணின் ஒரு பாதி பெண் பெண்ணின் ஒரு பாதி ஆண்
நன்றி சித்ரா அவர்களே

விழியின் வழியே கண்ணீராய்
கரைகிறேன் -காதல் எனும்
மடல் திறந்து ......
ஓஓஓஓ.......அடுத்த பரீட்சை எழுத தயாரோ.......! வாழ்த்துக்கள்

இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
என்ற அவர் பாடல் உலக புகழ் பெற்றது
அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபகங்கள்

நன்றி விஜயன் அவர்களே

குமரேசன் கிருஷ்ணனின் எழுதுகோலை காகிதத்தில் வைத்தால்
அது இயற்கையாகவே கவிதைகளை கொட்டும்

இந்த மாதிரி அண்ணன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
தங்கைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கஷ்ட பட்டு வளர்த்த புள்ளைங்கோ
கடைசியிலே கஞ்சி கூட ஊத்தாம
திங்கிற சோத்திலே கிடக்குற
கருவேப்பிலையை தூக்கி எறியராப்பிலே
எரியாருனுங்கோ.
அருமை ராஜ் அருமை

அதிகாலை வேளையில்
சமைப்பானின் விசில் சத்தம்
சற்றும் இடைவெளியின்றி
தெருவெங்கும்.....!

குளியலரையில்
சல சலவென சத்தம்
சூரியன் உதிக்கும் முன்......!

ஒப்புக்கு முணு முணுக்கும்
ஓரிரண்டு ஸ்லோகங்கள்........!

செந்நா சுடா அளவு
சுட சுடச் காபி.......!
தினசரி நாளிதழின்
தலைப்பு செய்திகளை
மேம்போக்காக மேய்ந்திடும்
ஓரப்பார்வை.
தலையை துவட்டியபடி....!

மழலைகளை துயில் எழுப்ப
உலகில் இல்லா மொழியில்
மயக்கிடும் மந்திரங்கள்......!

இவையாவும்
சிங்கார சென்னையில்
பளீரென வெளிறும்
பகலவன் தோன்றும் முன்......!

அரும்புகளை அலங்கரித்து
ஆட்டோவில் ஏற்றிவிடும்
வீர தீர சாகசங்கள்.......!

ஏணி போல காலணி........!
கைப்பாவை போல் கைப்பை.........!
நடையை சமன் செய்ய குடை.........!
என அனைத்தையும்
பொருக்கிக் எடுத்து
அரக்கபறக்க சென்றிடுவாள்
ஆறு ஏ வை பிடிக்க......!

நடத்துனரை
தேடிபிடித்து
தேனாம்பேட்டை
எனச்சொல்வாள்
கூரையின் கம்பியை
பிடித்தபடி.......!

காமுகனாளர்களின்
உரசல்களையும்
உதாசீனம் செய்வாள்
மனதில் புழுங்கியபடி......!

அலுவலகத்தில்
வழிந்திடும் ஆண்களை
விழி கொண்டு அடக்கிடுவாள்........!
எல்லை மீறும்போது
எச்சரிக்கையும்
ஏவி விடுவாள்........!

உழைத்து களைத்து
இல்லத்துக்குள் நுழைய
வழி மேல் விழிவைத்து
காத்திருந்த பிள்ளைகளை
அள்ளி அணைத்து
உச்சியில் முத்தமிட.......!
களைப்புகள் நீங்கிடும்
கணப்பொழுதில்........!

தொலைக்காட்சி தொடர்
தொல்லையே என்றாலும்
தொய்ந்த முகத்துடன்
காணத்தான் செய்வாள்.......!
கண்ணீர் சிந்தியபடி......!
காய்கறிகளை நறுக்கியபடி.......!

காம கணைகள் தொடுக்க
காத்திருக்கும்
கணவனையும்.......!
திரேகதிசுக்களால்
சீர் செய்து
போர்வைக்குள்
கண்முடி நுழைந்திட.......!
கடிகாரத்து முட்கள்
சற்றொப்ப இரண்டும்
மேல் நோக்கி
இணைந்திருக்கும்
ஒன்றோடு ஒன்று......!
நான் எழுதிய கவிதையே கருத்தாக.....!


நந்தவனமும் நதிக்கரையும்
நஞ்சையும் புஞ்சையும்
என் வசம் இல்லை
கவிதை தென்றல் இருக்கிறதே உங்களிடம்
அருமை கயல் அருமை வாழ்த்துக்கள்.

அன்றே தமிழ் அன்னைக்கு தெரியும்
உன் அன்னை சோற்றில் சேர்த்து சாப்பிட்ட பாலை
தமிழ் பாலாக மாற்றி ஒரு நல் கவிஞரை படைத்திருக்கிறாள்
கவிதையை படித்ததும் என் கண்கள் குளமாயின
நெஞ்சம் பதை பதைக்கிறது. உன்னையும் உன் அன்னையும் நேரில் பார்க்க வேண்டும் போல் உள்ளது.


பெ கோகுலபாலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே