அம்மாதாண்டா நானும் - இராஜ்குமார்
அம்மாதாண்டா நானும் ....
~~~~~~~~~~~~~~~~~~~~
பதினாறத் தாண்டி
பச்ச தாவணியில
பள்ளிக்கோடம் போனவள...
பால்டாய்லக் காட்டி மெரட்டுன
பாவி ..அவனுசுரு போகுமேனு
அடிமனச எரிச்சவளுக்கு
ஆம்பளப் புத்தி புரியல ...
பெத்த ஒறவ வுட்டுபுட்டு
ஒத்தப் புள்ளயா வந்தவ ...
ரெண்டாந் தரமா வாக்கப்பட
மொத்தப் பொழப்பும் நாசமாச்சி ..
மூத்தவ ...மொறச்சாலும்
கடுப்புல மெதிச்சாலும்
எரியற வெறவுல அடிச்சாலும் ..அவ
வெத்தலைக்கு சுண்ணாம்பாகனும்..
கூடப் பொறந்த எவனும்
ஒத்த பைசா கொடுக்கல ..
மெரட்டிக் கட்டுன இவனும்
பொம்பள மனச மதிக்கல ..
வாந்தியெடுத்த வாரத்துல ..
நா மாசமான வெறுப்புல
வூட்டவுட்டு தொரத்துனா ..மூத்தவ .
பட்டுப்பூசி குடுசயில
தனியா பொரண்டுப் படுத்தாலும்..
பட்டுப் போன பொறப்புல
பச்சப் புள்ள எனக்கெதுக்கு ...??
மேல கரட்டுல மொளைக்கிற
எருக்கம்பாலை ..எட்டு வாரமா
சோத்துல சேத்துத் தின்னுறேன் ...
எம்புள்ள ..நீ ...
என் வயித்துல
என்னால சாகட்டம்னு ....
- இராஜ்குமார்