இராஜ்குமார் Ycantu அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து
கவிதைகளை காலச்சுவடுகளாக
தரணியில் தரும்
தர்மபுரி மாவட்டம்
ஈன்ற இராஜகுமாரனே......!
பார் புகழும்
படைப்புகளை காலம் பாராமல்
எழுத்து தளத்தில் எழுச்சியுடன்
எழுதி எங்களின் இதயங்களை
கவர்ந்த இளம் கவியே......!
விழிப்புணர்வு கவிதையாய்
- பிளாஸ்டிக் உணர்வுகள்
மனதை தொடும் கவிதையாய்
- மரண விளம்பரம்
அன்பின் அவசியத்தை உணர்த்தும்
- அதிகார உயிர்
காதல் கவிதையாய்
- உயிரை உடைக்கும் உணர்வாய்
இன்னும் பல........!
எழுத பக்கங்கள் இல்லை.......!
பாராட்ட வார்த்தைகள் இல்லை.......!
கெட்டுபட்டியில் பிறந்தாலும்
கெடாமல் நல் இளைஞனாக........!
கொட்டும் முரசுடன்........!
கோடை தென்றலாய்.........!
எஞ்சிய வாழ்க்கையில்
தமிழுக்கு தொண்டனாய்........!
நீடூழி வாழ வாழ்த்துகிறேன்........!
எழுதுகோலை எடுத்து கொடுத்து
ஊக்குவிக்கும் ஊன்றுகோலாய்
ராஜாவிற்கேற்ற ராணியாய்
வாழ்க்கை துணைவி அமைந்து.......!
நல் மணவாழ்க்கை அமைய
இப்பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஆறுதல் பரிசு பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்.