குணமே குலம்
செல்வத்தில் எல்லாம்
நலமான செல்வம் நற்குணம்
கோடிகோடியாய் கொட்டிக் கொடுத்தாலும்
நல்ல குணத்திற்கு ஈடாகாது
குலத்தளவே ஆகும் குணம்
நல்ல குலத்தில் பிறந்த பிள்ளைகள்
என்றுமே நல்ல பண்பு
உள்ளவர்கள் ஆக இருப்பர்
எத்தனை செல்வம் வந்தாலும்
அவர்கள் குணமும் மனமும் மாறுவதில்லை
சாதி இரண்டொழிய வேறில்லை
அது ஆண் சாதி பெண் சாதி அல்ல
அது கீழ் சாதி மேல் சாதி
இதைத்தான் இரண்டு சாதி என்று
நம் முன்னோர் குறித்து வைத்தனர்
நல்லகுணம் படைத்தவர்களை
மேல் சாதி என்றும்
தீய குணம் கொண்டவர்களை
கீழ் சாதி என்றும் பிரித்து வைத்தனர்
வேறு எந்த குறிக்கோளும் சாதி என்ற
சொல்லுக்கு அர்த்தம் இல்லை
அதில் எந்தக் குற்றமோ குறையோ இல்லை
நிச்சயமாக நற்குணம் கொண்டவன் என்றும் நல்லவனே
அவன் குலமும் குணத்தால் உயர் குலமே
தீயகுணம் கொண்டவன் என்றும் தீயவனே
அவன் குலமும் குணத்தால் என்றும் கீழ் குலமே
ஆண்டவன் படைப்பில் எல்லோரும் சமமே
அவனவன் குணமே சாதியை பிரிப்பது