புகைக்கும் முகங்களே

தாடி முளைக்கும் முன்னே
பீடி பிடிக்கும் தம்பி
உன் வாழ்க்கை என்னாவது
வரும் காலம் வினாவாகுது

காற்றில் கிடக்கும்
காபன் பிரிக்கும்
நுரையீரல் அறைகளில் -இனி
சாம்பல் கிடக்கும்

ஓடி உழைத்த பணம்
தேவைப்படுத்தும் முன்னே
ஊதி இழுக்கும் புகை
தேதி குறித்து விடும் -உன்
தேகம் புகைத்துவிடும்

பூவாசம் அது வந்து
மணம் பேசிப்போகும் நாசித்துளைகளிலே
நாசிப்படைகளை போல்
நிக்கட்டின் துகள்கள்
நாசம் செய்கிறது

நீண்டு கிடக்கும் வாழ்வை
சுருட்டி போவதனால் தான்
பேரும் சுருட்டு ஆனதோ

யாரோ கொடுத்த உடல் அதை
நீயே கொழுத்தி விட்டாய்-அதில்
காலன் பிழை ஏதுடா -அது
நிகழ் காலப்பிழைதானடா
இதை கேட்டும் மனம் மாறுமா

எழுதியவர் : இணுவை லெனின் (2-Feb-15, 5:56 am)
பார்வை : 151

மேலே