நான் வளரவில்லை

மறுமுறை பிறந்தேன்
அவளது வருகையில்
பல வருட தவத்தின்
பயன் அல்லவா அவள்

அழுகையில் அரவணைத்தேன்
அடிக்கையில் அழுவதாய் நடித்தேன்
அவள் சிரிக்கையில் சிறகடித்தேன்
கொஞ்சும் குரலில் மனம் நெகிழ்ந்தேன்

தேவதை அவளின்
தேர் ஆனேன்
கைப்பற்றி நடந்தாள் அவள்
தடுக்கினால் நான் விழுந்தேன்

பள்ளி வாசலில் காத்திருப்பேன்
முடித்து வந்ததும் அரவணைப்பாள்
கதைகள் சொல்லியே ஆர்பரிப்பாள்
முத்தம் தந்து நான் மூச்சிரைப்பேன்

இரவு முழுவதும் விழித்திருப்பேன்
இவளை பற்றியே நினைத்திருப்பேன்
ஆசை கொண்டதை
படித்து வந்தாள்
என் கனவு முழுவதும்
நிறைத்து வந்தாள்

அந்த நாளும் வந்ததுவே
மணமேடை மீது அவள்
வீற்றிருந்தாள்
மேள தாளங்கள் முழங்குகையில்
என் இதய துடிப்புகள் எகிறியது
கணவனோடு அவள் வருகையில்
கண்கள் மீறி நீர் பெருகியது

பார்த்து பார்த்து நான்
இருந்தவனே அன்று
பார்க்க பார்க்க அவள் புதியவளாய்
தோற்றம் கொண்டு
தான் சிரிக்கின்றாள்
நான் தோற்றுவிட்டதாய் துடிக்கின்றேன்

போகும் போது தான்
உணர்ந்தேன் நான்
வளர்ந்துவிட்டாள் என்
செல்ல மகள்
வளரவில்லை என்
பெற்ற மனம்

எழுதியவர் : கவியரசன் (1-Feb-15, 7:48 pm)
Tanglish : naan valaravillai
பார்வை : 81

மேலே